அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை; அதிரடியை கோவையில் துவக்கினார் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை :
அதிரடியை கோவையில் துவக்கினார்

கோவை: தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட அரசுதுறை அதிகாரிகளுடன், வளர்ச்சிப் பணிகள் குறித்து நேரடியாக ஆலோசனை நடத்தினார்.

அதிகாரிகளுடன்,கவர்னர்,ஆலோசனை,அதிரடி,கோவை,
துவக்கினார்

கோவை பாரதியார் பல்கலையில் நேற்று நடந்த, 34வது பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார். விழா முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகை யில், கோவை மாவட்ட அரசு துறை உயரதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கு முன் பதவி வகித்த கவர்னர்கள், அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த விழாக் களில் பங்கேற்பதை மட்டுமே வழக்கமாக கொண்டு இருந்தனர்;அரசுதுறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை எதையும் நடத்தியது இல்லை; நேரில் கள ஆய்வும் மேற்கொண்டது

கிடையாது.ஆனால் தற்போது, தமிழக நடைமுறையில் இதுவரை பார்த்திராத வகையில், அரசு சார்பில் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை உயரதிகாரி களுடன், கவர்னர் ஆலோசித்தது, இதுவே முதல்முறை.

அதனால்,புதுச்சேரி கவர்னர்,கிரண் பேடி 'ஸ்டைலில்' தமிழகத்திலும் கவர்னர் பணியாற்ற முயற்சிப்பதாக, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இருந்தாலும், விமர்சனத்தை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி, ஆய்வு கூட்டத்தை, கவர்னர் நேற்று நடத்தினார். பின், பீளமேட்டிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

இன்று கள ஆய்வு :கவர்னர், இன்று காலை, 7:00 மணிக்கு, கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு பகுதியில், குப்பை அள்ளும் பணி,புதிதாக கட்டபட்டுள்ள கழிப்பறையை ஆய்வு செய்கிறார்.பா.ஜ., மாநில பொதுச் செயலர், வானதி சீனிவாசன், தன் ஆதரவாளர்களுடன் கவர்னரை சந்தித்தார்.

அவர் கூறுகையில், ''கவர்னர் என்பவர்அலங்கார பொரு ளாகவே இருந்ததாக, இதுநாள் வரை

Advertisement

குற்றச் சாட்டு இருந்தது. கோவை வந்துள்ள கவர்னர், அதிகாரிகளை பார்த்ததில் தவறில்லை, ''என்றார்.

அத்துமீறல் இல்லை :

ராஜ்யசபா, எம்.பி., பாலசுப்ரமணியம் கூறுகையில், ''மாநில அரசின் செயல்பாடுகளில், பா.ஜ., தலையீடு இல்லை. வடகிழக்கு மாநிலங்களில், இதுபோன்ற நிகழ்வு சாதாரணமானதே. இதில், அத்துமீறல் எதுவும் இல்லை,'' என்றார்.

அதிகாரிகள் கிலி :

கவர்னர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில்,கோவை மாநகர போலீஸ் கமிஷனர், அமல்ராஜ் பங்கேற்றார். சட்டம் - ஒழுங்கு தொடர்பாக, அவர் விவரித்து கொண்டு இருந்தார். அத்தருணத்தில், அவரை, திருச்சிக்கு மாற்றி இருப்பதாக,உத்தரவு வந்தது. இது, கூட்டத்தில் பங்கேற்ற உயரதிகாரிகள் மட்டத்தில், அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

'ஆரோக்கியமானதே':அமைச்சர் வேலுமணி, கூறுகையில், 'கவர்னர், அதிகாரி களுடன் ஆலோசித்தது, ஆரோக்கிய மான விஷயம். மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். பிரச்னை ஒன்றுமில்லை.என்னை புறக்கணித் ததாக கூறுவது தவறு. காலையிலேயே அவரை சந்தித்து, பேசி விட்டேன்.நாடு வளர்ச்சி பெற இதுபோன்ற ஆலோசனை அவசியம். இனி, மத்திய அரசு திட்டங்கள் வரும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-201722:21:26 IST Report Abuse

VaruljosephVaruljosephமுதல்வருக்கு உள்ள பொருப்பு எவ்வளவே. அதே அளவு ஆளுனருக்கும். உண்டு.இதுவரை வந்த ஆளுனர்கள். எனக்கென்னவென்று இருந்துருக்களாம். இவரை பார்த்து ஆச்சரியபடுபவர்களுக்கு

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-நவ-201719:18:47 IST Report Abuse

Pugazh V@சென்னை மணியன் "திராவிட திருடர்கள்" என்று யாரை சொல்கிறீர்கள்?. காமராஜரையா? கக்கனையா? பொன்.ரா.கி? தமிழிசை? ஏனெனில் இவர்கள் அனைவருமே திராவிடர்கள் அதனால கேட்கிறேன்

Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
16-நவ-201714:33:10 IST Report Abuse

கல்யாணராமன் சு.@புகழ் V, நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் தங்களை திராவிடர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோ, பிற்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டோ இருந்ததில்லை. அவர்கள் தங்களை முதலில் இந்தியர்கள், பின் தமிழர்கள் என்றே அழைத்துவந்துள்ளனர். இப்போது தெரிந்திருக்கும் யார் அந்த திராவிட திருடர்கள் என்று...

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
15-நவ-201717:36:51 IST Report Abuse

Jeeva edhula ena adhiradi erukku ?

Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X