ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி யூரியா தயாரிக்க திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி
யூரியா தயாரிக்க அசத்தல் திட்டம்

நாக்பூர்: ''நாட்டில் உள்ள அனைத்து தாலுகாவிலும், 'சிறுநீர் வங்கி'யை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. சிறுநீரிலிருந்து யூரியா தயாரிப்பதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவின் அளவை கணிசமாக குறைக்க முடியும்,'' என, மத்திய அமைச்சர், நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சிறுநீர் வங்கி,Urine bank, யூரியா, Urea, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,Union Minister Nitin Gadkari,   விவசாயிகள், Farmers, ஸ்வீடன், Sweden, நைட்ரஜன் ,Nitrogen,  பாஸ்பரஸ் ,Phosphorus, பொட்டாசியம்,Potassium,தாலுகா, Taluka,

மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து, நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா

மாநிலம், நாக்பூரில், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நம் நாட்டு விவசாயிகள், யூரியா உரத்துக்கு, வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வெளிநாடுகளில்இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவை, நம் விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, யூரியா இறக்கு மதியை குறைக்க, புது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு தாலுகா விலும், சிறுநீர் வங்கியை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. மனித சிறுநீரில், அதிமான நைட்ரஜன் அடங்கியுள்ளது. ஏற்கனவே, நம்மிடம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற, வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றுடன், நைட்ரஜனை சேர்க்கும் போது, யூரியா தயாரிக்க முடியும்.

இந்த பணிகள், துவக்க கட்டத்தில் உள்ளன. இதற்கான ஆய்வகம், நாக்பூர் அருகே அமைக்கப் பட்டுள்ளது. சிறுநீரை சேமிப்பதற்காக, ஒவ்வொரு

Advertisement

தாலுகாவிலும், 'சிறுநீர் வங்கிகள்' அமைக்கப் படும்.விவசாயிகள், 10 லிட்டர் பிளாஸ்டிக் கேன்களில், சிறுநீரை எடுத்து வந்து, இந்த வங்கிகளில் கொடுக்க லாம். இதற்காக அவர்களுக்கு, ஒரு லிட்டருக்கு, ஒரு ரூபாய் கொடுக்கப்படும்.

முதல்கட்டமாக, கிராமப்புறங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்; இது, பொருளாதார ரீதியாக சாத்தியமான திட்டமா என தெரியாது. இது ஒரு சோதனை முயற்சி தான். இதற்கான பணிகள், ஆரம்ப நிலையில் உள்ளன. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நிபுணர்களிடம், இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

என்னை பொறுத்தவரை, வீணாகும் பொருட் களை வைத்து, பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன். எனவே, வீணாகும் சிறுநீரை வைத்து, யூரியா தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201723:40:17 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மூத்திரத்தை காரணம் காட்டி இந்தாளு சுவீடன் போயிருக்காப்புலே. போட்டோ படத்திலே எதோ வெளிநாடு தான் தெரிகிறது. (வீடுகளின் அமைப்பே சொல்கிறது). அந்த சுவீடன் நாட்டான் என்ன சொல்லுவான், கழிப்பறை இருக்கா, சாக்கடை திட்டம் இருக்கான்னு கேப்பான். இவிங்க இல்லை, பிளாஸ்டிக் கேன் இருக்குன்னு இளிப்பாய்ங்க.

Rate this:
Suresh - Narita,ஜப்பான்
15-நவ-201718:56:09 IST Report Abuse

Suresh நம்ம எந்த ஒரு விசயத்தையும் நமக்கு உள்ள கடுகு அளவு மூளைய வைத்து கருத்து சொல்றோம். உண்மை என்ன தெரியுமா ?. இது ஒரு அதிசய / வினோத திட்டம் இல்லை. 1940 ல் நெதர்லாந்து நாட்டில் பாம் செய்ய அனைத்து குடிமக்களும் தினமும் காலை சிறுநீர் கட்டாயமாக அளித்தனர். இது அந்த இக்கட்டான காலத்தில் அரசுக்கு பேருதவியாக இருந்தது. விசயஞானம் இல்லாமல் கருத்து பொழிவதில் நம்ம ஆளுங்களை அடிச்சுக்கவே முடியாது.

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
15-நவ-201717:17:08 IST Report Abuse

Prabaharanஇவரின் யோசனைக்கு காசும் கொடுத்து யூரினும் கொடுக்க வேண்டுமா? இலவசமாக வாங்கி கொள்ளலாமே

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X