சசி கும்பல் கொள்ளைக்கு தலைமை வகித்தது திவாகரன்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா கும்பல், Sasikala gang,திவாகரன்,Divakaran, வருமான வரித்துறை, Income Tax Department, காற்றாலை,Windmill, போலி கம்பெனி,Fake Company, விவேக், Vivek,ஷகிலா,Shakila, கிருஷ்ணபிரியா, Krishnapriya,ஜாஸ் சினிமாஸ், Jazz Cinemas, விண்ட் மில் சுப்ரமணியன் , Wind Mill Subramanian, ஊழல் பணம், Corruption Money,மிடாஸ் மதுபான ஆலை,Midas liquor shop, செங்கமல தாயார் கல்லுாரி, Sengamala Mother college, கொள்ளை ,Robbery,

கோடி கோடியாய், சசி கும்பல் அடித்த கொள்ளைக்கு, சசிகலாவின் தம்பி, திவாகரன்,
மூளையாகவும், தலைமையாகவும் இருந்துள்ள தகவல், வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோடிகளை கொட்டி, பல காற்றாலைகளை வாங்கி குவித்ததும், விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. முறைகேடுகளை மறைக்க துவக்கப்பட்ட, போலி கம்பெனிகளில், இளவரசியின் வாரிசுகள், விவேக், ஷகிலா, கிருஷ்ணபிரியா ஆகியோருக்கு, முக்கிய பங்கு இருப்பதை கண்டுபிடித்த வரித்துறை அதிகாரிகள், சசி குடும்பத்தினர் வீடுகளில் கிடைத்த, வைரக் குவியலை மதிப்பிட முடியாமல் திணறுகின்றனர்.

சசிகலா கும்பல், Sasikala gang,திவாகரன்,Divakaran, வருமான வரித்துறை, Income Tax Department, காற்றாலை,Windmill, போலி கம்பெனி,Fake Company, விவேக், Vivek,ஷகிலா,Shakila, கிருஷ்ணபிரியா, Krishnapriya,ஜாஸ் சினிமாஸ், Jazz Cinemas, விண்ட் மில் சுப்ரமணியன் , Wind Mill Subramanian, ஊழல் பணம், Corruption Money,மிடாஸ் மதுபான ஆலை,Midas liquor shop, செங்கமல தாயார் கல்லுாரி, Sengamala Mother college, கொள்ளை ,Robbery,

தமிழகம் முழுவதும், சசிகலாவின் சொந்தங்கள், துாரத்து உறவுகள், பினாமிகள், போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே நேரத்தில், நவ., 9ல், அதிரடி சோதனை துவங்கியது.

அதிகாரமிக்க தலைவர்


இச்சோதனை குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது:
சசி கும்பல், மோசடி வழியில் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துகளை, எங்கு முதலீடு செய்வது; யாருக்கு, அதை பிரித்து தருவது என்பது போன்ற முக்கிய முடிவுகளை, சசிகலாவின் தம்பி திவாகரன் தான் எடுத்துள்ளார்.

அவர் தான், 'ஜாஸ் சினிமாஸ்' மற்றும் சில நிறுவனங்களை, விவேக் பொறுப்பில் விடுவது என்ற, முடிவையும் எடுத்து உள்ளார். அவரே, மிகப்பெரிய சசி குடும்பத்தின், சர்வ அதிகார மிக்க தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது ஆலோசனைப்படியே, குவித்த பணத்தில் கணிசமான தொகையை, காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளனர். ஒரு காற்றாலையாக வாங்காமல், காற்றாலைகள் இணைந்த

பெரிய குழுமத்தையே, மொத்தமாக விலைக்கு வாங்கியுள்ளனர். அதற்கு, இத்துறையில் பிரபலமாக உள்ள, 'விண்ட் மில்' சுப்ரமணியன் உதவியிருக்கிறார்.

இதுபோல்,பல நிறுவனங்களை,சமீப காலத்தில் வாங்கியுள்ளனர். அவற்றுக்காக, பல நுாறு கோடி ரூபாய் விலையாக கொடுத்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன.விவேக்கின் சகோதரியர், கிருஷ்ணபிரியா, ஷகிலாவுக்கு, போலி நிறுவனங்களை கையாளும் முக்கிய பொறுப்பை, திவாகரன் தந்துள்ளார். அதனால் தான், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரது வீடுகளில், மற்ற இடங்களை விட,அதிக நேரம் சோதனையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மர்மம் வெளிவரும்


சோதனையின் போது, வங்கிகளில், 15 'லாக்கர் களில்' முக்கியமான ஆவணங்கள் வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை திறந்து சோதனையிடும் போது, மேலும் பல நுாறு கோடிகளுக்கான மர்மம் வெளிவரும். இவர் களின் வீடுகளில் கிடைத்த வைர குவியலை, எங்களால் மதிப்பிடமுடியவில்லை. அதனால், அவற்றை மதிப்பிட, நம்பகமான மதிப்பீட்டாளர் களை, தேடி வருகிறோம்.

இந்த விவகாரத்தில், 300 பேர், 400 பேருக்கு, 'சம்மன்'அனுப்பியதாக கூறபடுவதில் உண்மை இல்லை.பினாமி சொத்து, போலி பரிவர்த்தனை ஆகியவற்றை குறிவைத்தே, இந்த சோதனை களை நடத்தினோம்.அதில், ஒட்டுமொத்த வருமான வரி வட்டாரமே அதிரும் அளவுக்கு, மிகப்பெரிய பலன் கிடைத்து உள்ளது. ஆவணங்களை மதிப்பிடுவதற்கே, அதிக நாட்கள் தேவை.ஒவ்வொரு ஆவணத்தையும் ஆராயத் துவங்கினால், ஒன்றில் இருந்து இன்னொன்று என, நுாறு தொடர்புகள் வருகின்றன.

அவற்றை விசாரித்து முடிப்பது என்பது, எங்களுக்கு மிகப்பெரிய சவால். இதில், தொடர்புடைய எந்த நபரையும், சாதாரணமாக கருத முடியாது; எதுவும் அவரிடம் இருக்காது என, எளிதில் விட்டு விட முடியாது. அதனால், மிகவும் சிரத்தையுடன், ஆழமான விசாரணை யில் இறங்க உள்ளோம்.முதல் தகவல் அறிக்கை பதியும்போது, முழு விபரமும் வெளியாகும்.அத்துடன், 'சத்யம் சினிமாஸ்'

Advertisement

வசமிருந்த 'லுாக்ஸ்' திரையரங்குகளை, விவேக்கின் 'ஜாஸ் சினிமாஸ்' வாங்கியது தொடர்பான இருதரப்பு ஆவணங்களையும் கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

துப்பாக்கி கிடைத்ததா?


சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள, விவேக் வீட்டில், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது. அது குறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'துப்பாக்கி எதையும், நாங்கள் பறிமுதல் செய்யவில்லை. அப்படி பறிமுதல் செய்வதாக இருந்தால், அதை, காவல் துறை தான் செய்ய முடியும்' என்றனர். விவேக்குக்கு, மிக குறைந்த கால அவகாசத் தில், சென்னை போலீசார், துப்பாக்கி உரிமம் வழங்கியுள்ளனர்.

தங்கம் தந்த சுரானா!* சசிகலா கும்பல், ஊழல் பணத்தை, முதலீடு செய்ய முடியாமல் திணறியுள்ளது. அப்போது, சென்னையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி சுரானா, அவர்களுக்கு உதவியுள்ளார். கோடிக் கணக்கில் பணம் பெற்று, தங்க நகைகளை, முறைகேடாக வாங்கி கொடுத்து உள்ளார். சென்னை, சவுகார்பேட்டை யில் உள்ள, அவரது வீடு மற்றும் பாரிமுனையில் உள்ள அவரது நிறுவனத்தில், 2016ல் வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது

*மன்னார்குடியில் உள்ள, திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கல்லுாரியில்,
சில ஆவணங்கள் கிடைத்தன. அங்கு, மாணவியர் விடுதியில், 65 லட்சம் ரூபாய் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

'மிடாஸில்' சிக்கியது என்ன?


காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில், சசிகலா கும்பலுக்கு சொந்தமான, 'மிடாஸ்' மதுபான ஆலை உள்ளது.அங்கு,5 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. அதில், அவர்கள், கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததற்கான, ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது தவிர, வருவாயை குறைத்துக் காட்டியதற்கான, முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.

-நமது சிறப்பு நிருபர்-


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (121)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-நவ-201719:53:24 IST Report Abuse

Pugazh Vஎல்லா கொள்ளைகளுக்கும் தலைவி மறைந்த ஜெயலலிதா தான். ஆனால் இதை சொல்ல ஏனோ பலருக்கும் கிலி பயம் தயக்கம்.

Rate this:
சிங்கர் - சென்னை,இந்தியா
15-நவ-201719:24:49 IST Report Abuse

சிங்கர்சென்ற வருட 75 நாள் நாடகத்தை இந்த ரைடு மிஞ்சிவிடும்.

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201717:44:22 IST Report Abuse

Sriram VDon't leave both the families of TN. We can finance all the infrastructure projects in TN

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
15-நவ-201717:36:44 IST Report Abuse

shekaranகூட்டு குடும்பமா இருக்கலாம் இப்படி திருட்டு குடும்பமாவா இருப்பிங்க

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
15-நவ-201717:30:56 IST Report Abuse

vbs manianஇவ்வளவு ஆன பின்பும் சசிகலா தலைமை பதவியில் இருக்க வேண்டுமா? இதை எல்லாம் படித்த பின் ஜெயலலிதா மீதிருந்த மரியாதை குறைகிறது. இந்த குடும்பமே இப்படி என்றால் அந்த குடும்பம் ???????

Rate this:
Prem - chennai,இந்தியா
15-நவ-201717:20:31 IST Report Abuse

Premendha maathiri mosadi gumbala ellam pidichi dhigar la tha podanum

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
15-நவ-201717:14:58 IST Report Abuse

Sundarammakala yemati sothu setha kudumbam enikum siraiyila than irukanum

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-நவ-201716:34:38 IST Report Abuse

Endrum Indianவேடிக்கை என்னவென்றால் எல்லா இடத்திலும் ஆய்வு ஆனால் ஜெயா வசித்த அறையில் ஆய்வு இல்லை, சசி வசித்த அறையில் ஆய்வு இல்லை? ஆனால் சந்தேகம் அவர்கள் வசித்த அறையின் சுவர்களை ஆய்வு செய்ய Ultrasonic /sonar கருவிகளை உபயோகிக்க , ஆவணங்கள், நகை, பணம் இருக்குமா சுவற்றிற்குள் என்று சந்தேகம். செய்வன திருந்தச்செய் வருமான வரித்துறையே/ அமலாக்கத்துறையே.

Rate this:
niki - Chennai,இந்தியா
15-நவ-201716:18:54 IST Report Abuse

nikimotha kudumbamum mosadi kumbal than

Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
15-நவ-201716:01:04 IST Report Abuse

R.MURALIKRISHNANஉலகமகா கேப்மாறி திவாகரன் தினகரன் கையில் தமிழகம்

Rate this:
Basic Instinct - Coimbatore,இந்தியா
15-நவ-201717:04:37 IST Report Abuse

Basic Instinctஒரு சமயம், 2019 ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும்... கூட்டணி கட்சிகள் தங்களின் முதல் கோரிக்கை என்னவாக இருக்கும். தமிழகத்தில் ஒரு சமயம் இவர்கள் அணி வெற்றி பெற்றால் (வாய்ப்புகள் அதிகம்), இவர்கள் வைக்கின்ற கோரிக்கை என்னவாக இருக்கும். அவ்வளவு ஓட்டும் எதிர்கட்சிக்கு செல்லாது, சிறுகட்சிகளும் செல்லாது... நடிகர்களால் முடியாது.. ஆட்சியில் இல்லாததால், பழிக்கும் ஆளாக்கவில்லை... வியூகங்கள் வகுப்பதில் வல்லவர்கள் (கூவத்தூர் சிறந்த எடுத்துக்காட்டு)... மக்களின் மனநிலை தெரியாது... இப்போதே எல்லா ரைடுகளும் முடிந்துவிடும், தண்டனை, அது அனுதாப ஓட்டாக மாறும். மீண்டும் ஆட்சி...

Rate this:
மேலும் 110 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement