ஆதரவற்றோருக்கு உதவும் திருவண்ணாமலை இளைஞர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உதவும் திருவண்ணாமலை இளைஞர்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஆதரவற்றோர், Orphanage, மணிமாறன்,Manimaran, உலக மக்கள் சேவை மையம்,  World People Service Center, சிறந்த தொழு நோயாளிகளுக்கான சேவையாளர் விருது, Servant Award for Best Lepers,தொழு நோயாளிகள்,Lepers, அனாதை,  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, Union Minister Arun Jaitley,  இளைஞர் , Youth, திருவண்ணாமலை ,Thiruvannamalai,

திண்டுக்கல்: திருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிமாறன்,31. இவர் உலக மக்கள் சேவை மையம் என்ற அமைப்பை துவக்கியுள்ளார்.

இவர் தலைமையிலான குழுவினர் தமிழகம் முழுவதும் தெரு ஓரங்களில் உள்ள தொழு நோயாளிகள், அனாதையாக இருக்கும் முதியோருக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.தொழு நோயாளிகள், முதியோர்களின் கை, காலில் உள்ள புண் மற்றும் காயங்களை துடைத்து மருந்து தடவுகின்றனர். நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை அழைத்துச் சென்று, காப்பகங்களில் ஒப்படைக்கின்றனர். அவர்களுக்கு, பெட்ஷீட், உணவு, புடவை, வேட்டி, சட்டைகள் வழங்குகிறார். அனாதையாக இறந்த தொழு நோயாளிகள் 350 பேரை நல்லடக்கம் செய்துள்ளார்.

இந்த சேவையை பாராட்டி சிறந்த தொழு நோயாளிகளுக்கான சேவையாளர் விருதை, கடந்த 2015ம் ஆண்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். மாநில அரசும் சிறந்த சேவகர்களுக்கான விருது வழங்கியுள்ளது.


பி.மணிமாறன் கூறியதாவது:இந்த இயக்கத்தை நானே ஏற்படுத்தினேன். இதற்காக நிதி கேட்டு நான் யாரிடமும் கையேந்தவில்லை. பனியன் மற்றும் டீ ஷர்ட்டுகள் விற்று வருகிறேன். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை கொண்டு உதவுகிறேன். ஒட்டன்சத்திரத்தில் தங்கி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இப்பணியை செய்து வருகிறேன். சிலநாட்களுக்குப் பின் பக்கத்து மாவட்டங்கள் என மாநிலம் முழுவதும் செல்வேன். முதியோர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை கொடுத்து, அருகில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்கிறேன். இதனால் ஆத்ம திருப்தி கிடைக்கிறது, என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
15-நவ-201721:15:13 IST Report Abuse
R.MURALIKRISHNAN வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201717:44:49 IST Report Abuse
அப்பு இப்பிடித்தான் மதுரை கிருஷ்ணன்னு ஒருத்தர் தொழில் ஆரம்பிச்சார். பண வசூல் எக்கச்சக்கம்... அமெரிக்காவெல்லாம் போய் கோடிக்கணக்கில் வசூல் பண்ணார்.... இப்போ அங்கே என்ன நடக்குதுன்னு தெரியல.
Rate this:
Share this comment
Cancel
Parthiban V - Tamilnadu,இந்தியா
15-நவ-201713:34:12 IST Report Abuse
Parthiban V வாழ்த்துக்கள் சார். உங்கள் பணி இன்னும் சிறப்புடன் அமைய அரசு உதவி செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
15-நவ-201712:35:26 IST Report Abuse
R.SUGUMAR உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் சகோதர ....
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
15-நவ-201708:29:59 IST Report Abuse
Srikanth Tamizanda.. வாழ்க பல்லாண்டு. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
15-நவ-201707:45:55 IST Report Abuse
Ram வாழ்க உம் தொண்டு, இறைவன் உம்முடனேயே எப்போதும் இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201707:32:19 IST Report Abuse
DhinakarDennzel வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
15-நவ-201707:32:17 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) Thank you Sir..
Rate this:
Share this comment
Cancel
AlexJegan -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201706:49:45 IST Report Abuse
AlexJegan மணிமாறன் உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு மனமாற வாழ்த்துக்கள் .. இவரைப் போன்ற நல்லவர்கள் நம்பரை share பண்ணலாமே...
Rate this:
Share this comment
Cancel
parimele@hotmail.com - chennai,இந்தியா
15-நவ-201706:24:39 IST Report Abuse
parimele@hotmail.com உங்கள் அன்பு தொண்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் தொண்டு பணி தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை