நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.
காந்திமதியம்மன், சன்னதியில் கடந்த 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
தினமும் காலை, இரவில் அம்மன் நான்கு ரத வீதிகளிலும் உலா நடந்தது. நேற்றுமுன்தினம் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
அம்மன் சன்னதியில் நெல்லையப்பர், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.காலை 9:30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடந்தது.
நாளை 16ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழாவும், 17ம் தேதி இரவு சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை