மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மண்டல பூஜை,mandala poojai, சபரிமலை, Sabarimala,கார்த்திகை, Karthikai, மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன், Melsanthi unniKrishnan, டிஜிபி லோக்நாத் பெஹ்ரா,DGP Loknath Behera,  எ.வி.உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி,AV Unnikrishnan Namboodiri,  மாளிகைப்புறம் அனிஷ் நம்பூதிரி, Manjabhavam  Ainil Namboodiri,   கேரள அரசு போக்குவரத்துக்கழகம் ,  Kerala State Transport Corporation,

சபரிமலை: மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், 'ஒரு மண்டல காலம்' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 17-ம் தேதி கார்த்திகை பிறக்கிறது. கேரளாவில் ஒரு நாள் முன்பாக நாளை( 16-ம் தேதி) கார்த்திகை மாதம் பிறந்து மண்டலகாலம் தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கிறது.

தற்போதைய மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நடைதிறந்து தீபம் ஏற்றுவார்.அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகளான சபரிமலை- எ.வி.உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புறம்- அனிஷ் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி கோயில் முன்புறம் வருவர். மாலை 6:30 -க்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரருஅபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்குள் அழைத்து செல்வார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது.
இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

16-ம் இரவு 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய்அபிஷேகம் தொடங்கும்.
தொடர்ச்சியாக 41 நாட்களும் இரவு 3:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.


ஏற்பாடுகள் தயார்


பக்தர்களை வரவேற்க மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வரும் வழியில் ஆறு வரிசை காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளது. இந்த காம்ப்ளக்ஸ் வழியாக புதிய வரிசை அமைக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக அப்பம்,- 50 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் பம்பை முதல் சன்னிதானம் வரை ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளதை தொடர்ந்து தொடக்கம் முதலே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஆண்டு இரண்டாயிரம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டிஜிபி லோக்நாத் பெஹ்ரா கூறியுள்ளார், கேரள அரசு போக்குவரத்துக்கழகம் முதற்கட்டமாக 300 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X