சுடச்சுட விவசாய கருவிகள் தயாரிப்பு : ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுடச்சுட விவசாய கருவிகள் தயாரிப்பு : ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுடச்சுட விவசாய கருவிகள் தயாரிப்பு : ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்

பெரம்பலுார்: -ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள், குறைந்த விலையில், விவசாயக் கருவிகளை தயார் செய்து தருவது, அரியலுார் மாவட்ட விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அரியலுார் மாவட்டத்தில், ஒரு மாதமாக பெய்து வரும் மழையால், ஆறு, குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்ப துவங்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விவசாயிகள் உழவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாய கருவிகள் தயார் செய்யும் கூட்டுக் குடும்பத்தினர், 20க்கும் மேற்பட்டோர், இரண்டு நாட்களாக, அரியலுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள், களை எடுக்கும் அரிவாள், விறகு வெட்டும் கோடாரி, மரத்தை அறுக்கும் பெரிய கத்தி போன்ற விவசாய கருவிகளை உடனுக்குடன், அதே இடத்தில் தீ மூட்டி, இரும்பை உருக்கி, தயார் செய்து வருகின்றனர். இவை, 100 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
தங்கள் கண் எதிரில் உடனுக்குடன் தயார் செய்து தருவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இது தவிர, வீட்டு தோட்டம் அமைத்துள்ளவர்கள், விரும்பும் அளவில் மண் வெட்டி, கோடாரி, கம்பு, கத்தி போன்ற கருவிகளையும் உடனுக்குடன் செய்து தருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தவர்களின் ரெடிமேட் விவசாயக் கருவிகள், விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
15-நவ-201711:39:32 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy " செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம்"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை