இந்தியாவுக்கான விசா விதிகள்; ஜப்பான் தாராளம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கான விசா விதிகள்; ஜப்பான் தாராளம்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியா,விசா,விதிகள்,ஜப்பான்,தாராளம்

புதுடில்லி : சுற்றுலா தொழில் மற்றும் கல்விக்காக ஜப்பான் வரும் இந்தியர்களுக்கான விசா நடைமுறையை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜன.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியர்கள், ஜப்பானில் தொழில் புரியவும், இங்கு வந்து கல்வி பயிலவும் ஏதுவாக அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது. 'சிங்கிள் என்ட்ரி' விசா மற்றும், 'மல்டிபுள் என்ட்ரி' விசா என, இரு வகை விசாக்கள் உள்ளன. புதிய விதிகளின் படி, மல்டிபுள் என்ட்ரி விசா காலத்தை, 5 ஆண்டுகளாகவும், ஒரு முறை வரும்போது, அதிகபட்சம், 90 நாட்கள் தங்கும் வகையிலும், விதிகளில் திருத்தம் செய்யப்படும்.

விசா விதிகள் தளர்வோடு இல்லாமல், விசா கோரி விண்ணப்பிக்கையில், அதோடு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். விசா விண்ணப்பத்திற்கான புதிய விதிகள், அடுத்த ஆண்டு, ஜன., 1 முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-நவ-201704:16:08 IST Report Abuse
Kasimani Baskaran இருநாடுகளும் கூட்டாக புதியனவற்றை வடிவமைப்பதில் இறங்கினால் பல விஷயங்களை நேர்த்தியாக செய்ய முடியும்...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-நவ-201704:10:19 IST Report Abuse
J.V. Iyer கார்த்தி,இதைப்படித்தீரா? உமக்கு குஷிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை