அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சாலையோரம் வால்வு அமைக்கப்படுமா: நாமக்கல், மக்கள் பயன்பாட்டிற்காக, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றி, நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் மூலம் வரும் தண்ணீரை பிரித்து, அனுப்புவதற்காக மோகனூர்-பரமத்தி பிரிவு சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள வால்வை, திறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளி, நடுரோட்டில் நின்று மேற்கொள்வதால் விபத்து அபாயம் உள்ளது.

ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்: ராசிபுரத்தில் இருந்து, ஆர்.புதுப்பட்டி செல்லும் சாலை, குச்சுக்காடு அருகே, வளைந்து செல்கிறது. இப்பகுதியில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத வகையில், சாலையின் இரு புறங்களிலும் புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இங்கு அமைக்கப்பட்ட ஒளிரும் விளக்குகள் தற்போது பழுதாகி வருகிறது. புதர் மண்டியுள்ளதை சுத்தம் செய்து, பழுதான ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்.


பிரதான சாலையில் வேகத்தடை தேவை: பள்ளிபாளையம் அடுத்த, வெப்படை- குமாரபாளையம் இடையே பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் மேட்டுக்கடை பகுதியில், ஆவத்திபாளையத்தில் இருந்து வரும் சாலை சந்திக்கிறது. இந்த சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்களில் வருவோர், எச்சரிக்கையுடன் வர வேண்டும். இல்லையெனில் விபத்து நடப்பதற்கு வாய்ப்புள்ளது. சாலை சந்திப்பில், வேகத்தடை அமைத்தால், விபத்துகளை தடுக்க முடியும்.

பயன்பாட்டுக்கு வராத எரிவாயு தகன மேடை: ப.வேலூர் காவிரிக்கரையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, திறப்பு விழா நடந்தது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் நடந்து வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தகனமேடை வரவில்லை. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், பலனில்லை. பழைய சுடுகாடும் பராமரிப்பின்றி புல்,பூண்டுகள் முளைத்து விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இரும்பு பைப்பால் காத்திருக்கு ஆபத்து: ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரியில் இருந்து வேலம்பாளையம் செல்லும் சாலையோரம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதில், இரும்பு பைப்புகள் மூன்றடி உயரத்திற்கு உள்ளது. சாலையை ஒட்டியே உள்ள, இரும்பு பைப்புகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வழியாக கல்லூரி, பள்ளி வாகனங்கள் அதிகம் செல்வதால், சாலையோரம் டூ வீலர்களில் செல்பவர்கள் ஒதுங்க முடிவதில்லை. இரவில் வாகனங்கள் வரும்போது, இதில், மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X