குழந்தைகள் தினவிழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தினவிழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சார்பில், குழந்தைகள் தினவிழா, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம், செயல்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையக்குழந்தைகளுக்கு, பேச்சுப்போட்டி, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி மற்றும் பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள, 15, சிறப்பு பயிற்சி மைய மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் ஆசியா மரியம் பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை