கொல்லிமலையில் இலவச கண் பரிசோதனை முகாம்: நாமக்கல் ஜி.ஹெச்.,ல் அறுவை சிகிச்சைக்கு சேர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலையில் இலவச கண் பரிசோதனை முகாம்: நாமக்கல் ஜி.ஹெச்.,ல் அறுவை சிகிச்சைக்கு சேர்ப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொல்லிமலை: நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில், கொல்லிமலை மக்களின் பார்வையிழப்பை தடுக்கும் வகையில், 'மழைவாழ் மக்களைத் தேடி' என்ற திட்டம், கடந்த, மார்ச் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கொல்லிமலை பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு, மலைவாழ் மக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட அனைத்து சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்து தரப்படுகிறது. உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மெல்வின் மெட்ரோ, சேந்தமங்கலம் நகர் லயன்ஸ் சங்கம் சார்பில், சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பை கண்டறியும் கண் மருத்துவ முகாம், கொல்லிமலை அரசு மருத்துவமனையில் நடந்தது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் மருத்துவர் ரங்கநாதன் தலைமையில், கண் மருத்துவ உதவியாளர்கள் இளங்கோ, ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு, கண் புரை, கண் நீர் அழுத்தம் மற்றும் கண் விழித்திரை பரிசோதனை செய்யப்பட்டு, சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு இருக்கிறதா என, பரிசோதனை செய்யப்பட்டது. கண் புரையால் பாதிக்கப்பட்ட, பத்து நோயாளிகள், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். கொல்லிமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார், சமுக ஆர்வலர் சசி, சுகாதார ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X