குமாரபாளையத்தில் கார் உருண்டு 4 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமாரபாளையத்தில் கார் உருண்டு 4 பேர் படுகாயம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், டூவீலருக்கு வழி விட பிரேக் போட்டதால், கார் உருண்டு, நான்கு பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்தவர் தீபாமணி, 35, ஊராட்சி ஒன்றிய பொறியாளர். இவர் தனது தாயார் ஜோதீஸ்வரி, 66, மகள் விஷ்ணுப்ரியா, 9, ஆகியோருடன், உடுமலைப்பேட்டை, அமராவதி தனியார் பள்ளியில் படித்து வரும், மகனை பார்த்து விட்டு, நேற்றுமுன்தினம் மாலை, 6:45 மணியளவில் சேலம்-கோவை பைபாஸ் சாலையில் கொளத்துபாளையம் என்ற இடத்தில், பொலிரோ காரில் சென்று கொண்டிருந்தனர். காரை, அதே ஊரை சேர்ந்த நாகேந்திரன், 33, ஓட்டினார். எதிரில் வரும் டூவீலர் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுனர் பிரேக் போட்டதால், கார் நிலை தடுமாறி பல தடவை சாலையில் உருண்டது. காரில் இருந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை