இலவச கண் சிகிச்சை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், டெக்ஸ்சிட்டி அரிமா சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. குமாரபாளையத்தில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, டெக்ஸ்சிட்டி அரிமா சங்கம் சார்பில், குழந்தைகள் நல சிகிச்சை முகாம், சேலம் பிரதான சாலை, போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஓம் சக்தி மெடிக்கல்ஸ் கடையில் நடந்தது. சங்கத் தலைவர் கோபி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தனபால் முகாமை துவக்கி வைத்தார். குழந்தைகள் மருத்துவர் தினேஷ்குமார் பங்கேற்று, குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து, மருத்துவ ஆலோசனை வழங்கினார். முகாமில், 125க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. நிர்வாகிகள் செல்வகுமார், சசி, மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை