பள்ளி ஆசிரியரிடம் துணிகரம்: 13 பவுன் நகை வழிப்பறி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆசிரியரிடம் துணிகரம்: 13 பவுன் நகை வழிப்பறி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: களங்காணி அருகே, அரசுப்பள்ளி ஆசிரியரிடம், 13 பவுன் நகைகளை, பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல், பரமத்தி ரோடு கொங்கு நகரை சேர்ந்தவர் நஞ்சுதா, 45. செல்லப்பப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர், நேற்று பள்ளி முடிந்து, திருமலைப்பட்டியில் உள்ள பாட்டியை பார்க்க, ஸ்கூட்டரில் சென்றுள்ளார். களங்காணி சர்வீஸ் சாலையில் சென்றபோது, யமகா பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர், நஞ்சுதா அணிந்திருந்த, 13 பவுன் நகைகளை பறித்து சென்றான். இவரது கணவர் அருளரசு, 48, தூத்துக்குடி கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளராக உள்ளார். புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை