தொடர் கொள்ளையில் 5 பேர் கைது; ரூ.13 லட்சம் மதிப்பு பொருட்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடர் கொள்ளையில் 5 பேர் கைது; ரூ.13 லட்சம் மதிப்பு பொருட்கள் பறிமுதல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த, தொடர் கொள்ளையில் ஈடுபட்ட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.

நாமகிரிப்பேட்டை அடுத்த, வடுகம் கிராமத்தில் கடந்த அக்., 12 இரவு தனியாக இருந்த, வயதான தம்பதியரை கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த, 21 பவுன் நகைகள், 1.2 லட்சம் ரூபாயை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளை கும்பலை பிடிக்க எஸ்.பி., அருளரசு உத்தரவுப்படி, நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ராசிபுரம் செல்லமுத்து, எருமப்பட்டி எஸ்.ஐ., மாதையன் ஆகியோர் கொண்ட தனிப்படை கொள்ளை கும்பலை தேடிவந்தது. நேற்று முன்தினம் மதியம், தனிப்டையினர் காக்காவேரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் திரும்பி, செல்ல முயன்றனர். இருவரையும் பிடித்து விசாரித்தபோது, வேலூர், மாதாகோவில் தெருவை சேர்ந்த நந்தகோபால் மகன்கள் நவீன், மதிவாணன் என்பதும், இவர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் கொடுத்த தகவல்படி, சேலம் சின்னசீரகாப்பாடியை சேர்ந்த கேசவன், 35, கன்னங்குறிச்சி ஆறுமுக ஐயர் தெருவை சேர்ந்த மணிகண்டன், 29, இடைப்பாடி மேட்டுத்தெருவை சேர்ந்த செல்வம், 26, ஆட்டையாம்பட்டி பனங்காட்டை சேர்ந்த மூங்கிலடி பிரபு, 28, கிருஷ்ணகிரி மாவட்டம் சானந்திரம், காந்திநகர் ரவி, 28, என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள், அக்., 2ல், கொளத்தார் பகுதியில் தனியாக இருந்த, வயதானவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 10 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். நாழிக்கல்பட்டி, பெங்களூரில் தங்கியிருந்த ஐந்து பேரையும், தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 50 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 3.1 லட்சம் ரூபாய், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை