புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேடு, பள்ள சாலையால் தவிப்பு: கரூர் அடுத்த, கொளந்தாகவுண்டனூரில், சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள், சர்க்கஸ் சாகசம் செய்து, சாலையில் செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது, மோசமான சாலையில் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. வாகன டயர் பஞ்சராவது அடிக்கடி நடப்பதால், அலுவலகம், பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. சாலையை சீரமைக்க வேண்டும்.
- கே.பி.மனோகரன், கொளந்தாகவுண்டனூர்.


புழுக்களுடன் குடிநீர் வினியோகம்: பெரியகுளத்துப்பாளையம் பகுதிக்கு, நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர், கடந்த சில நாட்களாக அசுத்தமாக, புழுக்களுடன் காணப்படுகிறது. இதனால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளோரின் முறையாக கலக்காமல் குடிநீர் வழங்கப்படுவதால், இதுபோல தண்ணீரில் புழுக்கள் காணப்படுகின்றன. புழுக்களுடன் வரும் நீரை பயன்படுத்த முடியாமல், குடிநீரை விலைக்கு வாங்கி உபயோகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
- சி.தியாகராஜன், வெங்கமேடு.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை