தேசிய நூலக வார விழா தொடக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நூலக வார விழா தொடக்கம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில், 50வது தேசிய நூலக வார விழா நேற்று துவங்கியது. கரூர் முத்துராஜபுரத்தில் உள்ள நூலகத்தில், புத்தக கண்காட்சியை, மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் துவக்கி வைத்தார். அதில் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இன்று காலை, 11:00 மணிக்கு கரூர் கிளை சிறையில், சிறைவாசிகளுக்கு ஓவியப் போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு, எஸ்.பி., ராஜசேகரன் பரிசு வழங்குகிறார். வரும், 16ல், கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் விழாவில், நூலக வாசகர், உறுப்பினர்களுக்கு சிறப்பு ஸ்மார்ட் கார்டு வழங்கி, சென்னை பொது நூலக இயக்குனர் கண்ணப்பன் பேசுகிறார். ஏற்பாடுகளை, கரூர் மாவட்ட மைய நூலக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X