சாலை விபத்துகளில் இரு மூதாட்டிகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்துகளில் இரு மூதாட்டிகள் பலி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே, லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சோளியம்மாள், 72. இவர் நேற்று மதியம், 12:30 மணிக்கு, உறவினர் ரகு, 22, என்பவருடன், யமஹா பைக்கில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், செம்மடை அருகே, சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரையில் இருந்து சேலம் சென்ற லாரி, பைக் மீது மோதியது. அதில், அதே இடத்தில் சோளியம்மாள் பலியானார். காயமடைந்த ரகு, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


* குளித்தலை அடுத்த, சுண்டுகுழிப்பட்டியை சேர்ந்தவர் பட்டாயி, 65, கடந்த, 13 மதியம், 3:15 மணியளவில், உப்பிடமங்கலம் - சிந்தாமணிபட்டி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, கரூரில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் பட்டாயி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். சிந்தாமணிப்பட்டி போலீசார் பஸ் ஓட்டுனர் சந்தோஷ், 37, மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை