அனைத்து ஆசிரியர்கள் சங்கம் தொடக்க கல்வி அலுவலரிடம் மனு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து ஆசிரியர்கள் சங்கம் தொடக்க கல்வி அலுவலரிடம் மனு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆசிரியர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்ககல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல், காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இவற்றை செயல்படுத்த வலியுறுத்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அனைத்து ஆசிரியர்கள் சங்க ஆசிரியர்கள், மகாதானபுரம் அருகில் செயல்படும் கிருஷ்ணராயபுரம் அரசு தொடக்ககல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை பண பலன்களை விரைந்து வழங்க வேண்டும். பதிவு உயர்வு, ஊக்க ஊதியம், தேர்வுநிலை முன் அனுமதி, சான்றிதழ் உண்மை தன்மை ஆகிய கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன. தொடக்ககல்வி அலுவலர் சேகர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் குமுதா ஆகியோர் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை