தேசிய உயர்மட்டக் குழு - மாநில முதல்வர்களிடம் பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேசிய உயர்மட்டக் குழு - மாநில முதல்வர்களிடம் பரிந்துரை

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

"நதிகளை மீட்போம்" இயக்கத்தின் பணிகளை வழிநடத்த தேசிய உயர்மட்டக் குழு அமைந்தது - மாநில முதல்வர்களிடம் பரிந்துரை புத்தகம் வழங்கப்பட்டது

தில்லி: நதிகள் மீட்பு இயக்கத்தின் பல்வேறு அம்சங்களை முன்னெடுத்துச் செல்ல,தேசிய அளவிலான, பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைந்துள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவுனர் சத்குரு அவர்கள் அறிவித்துள்ளார் . இக்குழுவில் சத்குருவை தவிர, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.அர்ஜித் பசாயத், பையோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி.கிரண் மஜூம்தார் ஷா, உலக வனவிலங்கு நிதியத்தின் பொது செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகி திரு.ரவி சிங், நீர்வளத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்வுக்கான இந்திய அமைச்சகத்தின் செயலாளராக இருந்து டிசம்பர் 2016ல் ஓய்வுபெற்ற IAS அதிகாரி திரு.சஷி சேகர், இந்திய விவசாய அமைச்சகத்தில் சிறு விவசாயிகள் வேளாண்தொழில் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராக இருந்த IAS அதிகாரி திரு.பிரவேஷ் சர்மா, ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு, அரசாங்கத்துக்கும், இதில் சம்பத்தப்பட்ட தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், சேவை நிறுவனங்கள், பிற நிபுணர்கள், ஆகியோருக்கும் இடையே பலநிலைகளில் இடைமுகமாக செயல்படும். நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்துவது, கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, போன்றவற்றில் உள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு, இக்குழு அமல்படுத்தக்கூடிய செயல்திட்ட கட்டமைப்பை உருவாக்கும். இக்குழுவின் ஒரு முக்கிய குறிக்கோள், பொருளாதாரரீதியாக தொடர்ந்து இலாபம் ஈட்டி, விவசாயிகளின் வருவாயை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடிய முன்மாதிரிகளை உருவாக்குவதாகும்.

தானே நேரடியாக வாகனம் ஓட்டியபடி, 9300 கிலோமீட்டர் தூரத்திற்கு 16 மாநிலங்கள் வழியாக , ஒரு மாதமாக சென்ற நதிகளுக்கான பயணத்தின் தொடர்ச்சியாக, பல்துறை நிபுணர்களின் குழுவை உருவாக்கியிருப்பதை சத்குரு அறிவித்தார். செப்டம்பர் 3ல் துவங்கி அக்டோபர் 2ல் நிறைவடைந்த இந்த ஒரு மாத பயணத்தின்போது, விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், மாணவர்கள், தொழில் நெறிஞர்கள், ஊடகங்கள் என்று அனைவரும் வரலாறு காணாத உற்சாகத்துடன் இவ்வியக்கத்தில் கலந்துகொண்டார்கள். அக்டோபர் 3ம் தேதி, மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோதி அவர்களிடம், நதிகளுக்கு புத்துயிரூட்டும் செயல்திட்ட வரைவின் பரிந்துரைகளை சத்குரு ஒப்படைத்து பயணத்தை நிறைவுசெய்தார்.

மேலும் இந்திய துணை ஜனாதிபதி திரு வெங்கய்யா நாயுடு அவர்களிடமும் ,சுற்றுச்சூழல், காடுகள், தட்பவெப்பநிலை, புவி அறிவியல் & அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கான மத்திய அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் அவர்களிடமும் சமீபத்தில் இந்த பரிந்துரை புத்தகம் வழங்கப்பட்டது.

தற்போது அனைத்து மாநில முதல்வர்களிடமும் நதிகளுக்கு புத்துயிரூட்டும் செயல்திட்ட பரிந்துரை புத்தகம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இது வரை தமிழகம், கேரளா, ஆந்திரம்,ஜார்கண்ட், மத்தியபிரதேசம், சத்திஸ்கர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இதைப் பெற்றுள்ளனர்.

நதிகளுக்கான இவ்வியக்கம், சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களின் பங்கேற்போடு, 16 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களின் ஆதரவைப் பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு, rallyforrivers.org இணையதளத்திற்கு செல்லவும்,

நதிகளுக்கு புத்துயிரூட்டும் செயல்திட்ட வரைவின் பரிந்துரைகளை பதிவிறக்கம் செய்ய:
https://cdn.isha.ws/public/docs/pdir/RFR_RevitalizationOfRiversInIndia-Web.pdf

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை