அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : நவ 15, 2017
Advertisement

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி: கரூர் திருமாநிலையூரில், குடிநீர் வினியோகத்திற்கென, ஆழ்துளை கிணறு தோண்டி, சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மோட்டர் பழுது முதலான காரணங்களால், தொட்டியில் தண்ணீர் வருவதில்லை. மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். இப்பகுதி முழுவதும் உள்ள, சின்டெக்ஸ் தொட்டிகளில், பெரும்பாலும் பயன்பாடு இல்லாமல்தான் உள்ளன. அவற்றை சரி செய்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் படி, செய்ய வேண்டும்.

பஸ் ஸ்டாண்டில் வாகன நெருக்கடி: கரூர் பஸ் ஸ்டாண்டில், இட நெருக்கடி காரணமாக, பஸ்கள் வந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இங்கு, இருசக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் பல இடங்களில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், திரும்ப வழியில்லாமல் பஸ்கள் முட்டி மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. வெளியே வர முடியாமல் நிற்கும் பஸ்களால், மற்ற பஸ்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இடையூறு தரும் மரக்கிளைகள்: கரூர் குமரன் நகராட்சி பள்ளி அருகே, போக்குவரத்து மற்றும் மின்சார ஒயர்கள் செல்ல இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன. வெட்டிய கிளைகளை அப்புறப்படுத்தாமல், சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், பலமாக காற்றடிக்கும் சமயங்களில், கிளைகள் நகர்ந்து சாலை நடுவில் கிடக்கின்றன. இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், மரக் கிளைகளால் தடுமாறி விழுகின்றனர்.

சாலை அருகே ஆழ்துளை குழாய்: கரூர் ராயனூர் சாலையில், பொது மக்கள் பயன்பெறும் வகையில், அடிகுழாய் அமைக்கப்பட்டது. நாளடைவில் குழாயில் தண்ணீர் இல்லாததால், பயன்பாடின்றி உள்ளது. அடிகுழாய் சாலையோரத்தில் இருப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. இரவு நேரத்தில் வருவோர், அடி குழாயில் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். பயன்பாடு இல்லாமல் உள்ள அடி குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாலம் சாலையில் வடிகால் இல்லை: கரூர் புதிய அமராவதி பாலம் சாலையோரம், வடிகால் வசதி முறையாக செய்து தரப்படாமல் உள்ளது. இதனால், மழை பெய்யம் போது, வெளியேற வழியில்லாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் கழிவுநீருடன் கலந்து மழை நீரும் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை பரப்பும் கொசு உற்பத்தி மையமாக உள்ளது. ஆங்காங்கே தேங்கிய நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை