டி.என்.பி.எல்., ஆலை குளத்தில் விழுந்து கட்டட தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எல்., ஆலை குளத்தில் விழுந்து கட்டட தொழிலாளி பலி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே, டி.என்.பி.எல்., ஆலையில் உள்ள குளத்தில் விழுந்து, கட்டட தொழிலாளி இறந்தார். கரூர் மாவட்டம், காகிதபுரத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. காகிதம் தயாரிப்பு பணிக்காக, காவிரியாற்றில் இருந்து, ராட்சத குழாய்கள் மூலம், ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. காவிரியாற்றில் தண்ணீர் செல்லாத நாட்களில், தண்ணீர் தேவைக்காக ஆலை வளாகம், குடியிருப்பு வளாகத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. அந்த குளங்களில், காவிரியாற்றில் இருந்து, தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, குளித்தலை பகுதியை சேர்ந்த பழனிசாமி, 30, குளத்துக்கு தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி இறந்தார். பழனிசாமிக்கு, வள்ளி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை