மாவட்டத்தில் முதன் முறையாக அரசுப் பள்ளியில் 'ஏசி' வகுப்பறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் முதன் முறையாக அரசுப் பள்ளியில் 'ஏசி' வகுப்பறை

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த பொய்யாமணி யூனியன் நடுநிலைபள்ளியில், 'ஏசி' வகுப்பறையை டி.இ.ஓ., திறந்து வைத்தார்.

குளித்தலை அடுத்த, பொய்யாமணி யூனியன் நடுநிலைப்பள்ளியில், நேற்று காலை, 11:00 மணியளவில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலேயே முதன் முறையாக, 'ஏசி' பொருத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு வகுப்பறை திறப்பு விழா, பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மனோகரன், குளிரூட்டி பொருத்தப்பட்ட வகுப்பறையை தொடங்கி வைத்து மனோகரன் பேசியதாவது: மாவட்டத்தில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு இப்பள்ளியில் தான் தொடங்கியுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் முதல், 'ஏசி' பொருத்திய முதல் வகுப்பறையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளிக்கென தனியாக முகநூல், வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் வைபை வசதி, கணினி ஆய்வகம் இவற்றின் செயல்பாடுகளை காண மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகைய செயல்பாடுகளால், பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை தற்போது, 170 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால், இப்பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக உள்ளது. மாணவர்கள் இதை சிறப்பாக பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். குழந்தைகளின் மனம் கவரும் வகையில், பல வண்ணங்களில் அமைந்துள்ள, ஸ்மார்ட் கிளாஸ், உணவருந்தும் இடம், மாணவர்களால் வளர்க்கப்படும் மாடித்தோட்ட, காய்கறிச் செடிகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X