நெட்வொர்க் முடக்கத்தால் ஆதார் சேவை மைய பணிகள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெட்வொர்க் முடக்கத்தால் ஆதார் சேவை மைய பணிகள் பாதிப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் பதிவு சேவை மைய பணிகள், நெட்வொர்க் முடக்கத்தால் பாதிப்படைந்தன.

கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் பதிவு சேவை மையம் செயல்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, மக்கள் தங்கள் ஆதார் எண் பதிவு செய்ய, மையத்துக்கு வருகின்றனர். சேவை மையத்தின் மூலம், பள்ளி குழந்தைகள், மற்றும் மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் பதிவு செய்து தரப்படுகிறது. மேலும், முகவரி மாற்றம், பெயர் மாற்றம் என அனைத்து மாற்றமும் சரி செய்யும் பணி நடக்கிறது. சேவை மையத்தில் நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியிலிருந்து, நேற்றிரவு வரை, நெட்வெர்க் செயல்படவில்லை. இதனால், ஆதார் சேவை பணிகள் முற்றிலும் முடங்கின. பதிவு செய்ய வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல, கடவூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளிலும் நெட்வெர்க் இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை