கரூர் உழவர் சந்தையில் கந்து வட்டி வசூலுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் உழவர் சந்தையில் கந்து வட்டி வசூலுக்கு தடை

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் உழவர் சந்தையில், கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதோ, வசூல் செய்யவோ கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த மாதம், கந்து வட்டி கொடுமையால் இசக்கி என்பவரது குடும்பத்தினர் தீக்குளித்து இறந்தனர். இதனால், மாநிலம் முழுவதும், கந்து வட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை, 30க்கும் மேற்பட்டவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கரூர் - திருச்சி சாலை, முத்து ராஜபுரத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், விவசாயிகளுக்கு, கந்து வட்டி பணம் கொடுக்கவோ, வசூல் செய்வதோ கூடாது என, மாவட்ட வேளாண் வணிகத்துறை சார்பில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி கந்து வட்டிக்கு கடன் வழங்கினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X