போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.,) சார்பில், மண்டல துணைத்தலைவர் தலைமையில், கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக துவக்க வேண்டும். அரவக் குறிச்சியில் இருந்து, இருவருக்கு அளிக்கப்பட்டுள்ள இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து கழகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். மாநில சம்மேளன பொதுச்செயலாளர் லட்சுமணன், மாவட்ட சி.பி.ஐ., செயலாளர் பெரியசாமி, மண்டல தலைவர் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் சேசன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை