மகளிர் போலீஸ் பற்றாக்குறையால் தேங்கும் புகார் மனுக்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் போலீஸ் பற்றாக்குறையால் தேங்கும் புகார் மனுக்கள்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலையில், மகளிர் போலீஸ் பற்றாக்குறையால், மனுக்கள் தேக்கமடைந்துள்ளன.

கரூர் மாவட்டத்தில், குளித்தலை, கரூர் ஆகிய இரண்டு இடங்களில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. குளித்தலை மகளிர் போலீசில், குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர், தோகைமலை, சிந்தாமணிபட்டி, பாலவிடுதி ஆகிய ஆறு போலீஸ் சரகத்தில் உள்ள பெண்கள் பாதிப்பு, குடும்ப பிரச்னை குறித்து, மனு கொடுக்கின்றனர். இதில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலா ஒருவர், இரண்டு தலைமை காவலர்கள் மற்றும், 11 போலீசார் பணியில் இருக்கவேண்டும். தற்போது, இன்ஸ்பெக்டர் மல்லிகா, எஸ்.ஐ., சித்ரா, தலைமை காவலர்கள் லட்சுமி, தனலட்சுமி மற்றும் போலீசார்கள் ஜெயா, ஜோதிலட்சுமி ஆகியோர் பணியில் இருக்கின்றனர். பணியில் இருக்கும் போலீசார் கோர்ட் பணி, தபால் பணி, கம்யூட்டர் பணி, பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் பல மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டியுள்ளது. மகளிர் போலீஸ் பற்றாக்குறையால், குடும்ப பிரச்னைகளை தீர்வு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பல பகுதியில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், ஏராளமான புகார்கள் விசாரிக்கப்படாமல் தேங்கியுள்ளன. குளித்தலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X