துப்புரவு பணியாளர்களுக்கு பாதி சம்பளம் வழங்குவதாக புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுக்கு பாதி சம்பளம் வழங்குவதாக புகார்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குளித்தலை: குளித்தலை யூனியன் பகுதியில், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என, 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, யூனியன் நிர்வாகம் சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

குமாரமங்கலம் யூனியன் நடுநிலைப்பள்ளியில், துப்புரவு பணியில் இருக்கும் முத்து (எ) முருகன் என்பவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாத சம்பளத்தில் பாதித்தொகை மட்டும் வழங்கியுள்ளார். பிடித்தம் செய்யப்பட்ட தொகை வழங்க கோரி, துப்புரவு பணியாளர் புகார் தெரிவித்தபோது யூனியன் கமிஷனரிடம் கேட்டுப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட முருகன், யூனியன் ஏ.பி.டி.ஓ., வெங்கடாசலம், ஏ.இ.இ.ஓ., ராஜலட்சுமியிடம் கடந்த வாரம் புகார் கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இது குறித்து துப்புரவு தொழிலாளி முருகன் கூறியதாவது: பிடித்தம் செய்யப்பட்ட பாதி சம்பளத்தொகையை வழங்கக்கோரி இரண்டு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். மனுவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னையும் விசாரணை செய்யவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வரும் திங்கள் கிழமை, கலெக்டரிடம் புகார் கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து யூனியன் கமிஷனர் ரெத்தினம் கூறியதாவது: துப்புரவு பணியாளர் என்னிடம் புகார் மனு கொடுக்கவில்லை, ஏ.பி.டி.ஓ.,விடம் கொடுத்துள்ளார். என்னிடம் புகார் செய்தால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை செய்யப்படும். மேலும் இதுகுறித்து, ஏ.இ.இ.ஓ., மூலம், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை செய்யப்படும். இதேபோல் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X