ரயில்வே கேட் வழியாக விதிமீறி செல்லும் வாகனங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே கேட் வழியாக விதிமீறி செல்லும் வாகனங்கள்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை ரயில்வே கேட்டில், தடையை மீறி செல்லும் பைக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்னர். குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், தேவதானம் ரயில்வே கேட் வழியாக, திருச்சி - கரூர் மார்க்கமாக, ரயில்கள் செல்கின்றன. அப்போது, ரயில்வே கேட் போடப்படுகிறது. அப்போது மணப்பாறை மற்றும் குளித்தலை பகுதியில் இருந்து செல்லும் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் கேட் போடப்பட்டிருந்தாலும், கேட் கீப்பர் எச்சரிக்கை செய்தாலும், பொருட்படுத்தாமல், விபத்து ஏற்படும் வகையில், வாகனங்களை கேட் உள்ளே தள்ளிக் கொண்டு செல்கின்றனர். கேட் போட்ட பிறகு, பைக்குகள், சைக்கிள்கள் செல்லாத வகையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை