இந்திய கம்யூ., கட்சி மாவட்ட குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., கட்சி மாவட்ட குழு கூட்டம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சியின், மாவட்ட குழு கூட்டம், முருகேசன் தலைமையில் தான்தோன்றிமலை கட்சி அலுவலகத்தில் நடந்தது. விவசாய சங்கத்தினர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, கொசு மருந்து அடிக்க வேண்டும். ராஜாஜி சாலை, ரத்தினம் சாலையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய வேண்டும். மேலப்பாளையம் - கோயம்பள்ளி இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில், மின்விளக்குகள் அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, துணை செயலாளர்கள் சேஷன், மோகன், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை