4 வீடுகளில் பூட்டு உடைத்து கொள்ளை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 வீடுகளில் பூட்டு உடைத்து கொள்ளை முயற்சி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் அக்ரஹாரத்தில், நான்கு வீடுகளில் பூட்டு உடைத்து நடந்த கொள்ளை முயற்சியால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் அருகே, மகாதானபுரம் அக்ரஹாரத்தில், ராதா, 50, துளசி, 62, சின்னம்மாள், 65, உமா மகேஷ்வரன், 70, ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், மர்ம ஆசாமிகள், நான்கு வீடுகளில் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இருந்ததால், கொல்லைப்புற கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. பூட்டியிருந்த மற்ற இரண்டு வீடுகளில் முன் பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீடுகளில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து நடந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை