வீரராக்கியத்தில் மணல் கடத்தல் லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரராக்கியத்தில் மணல் கடத்தல் லாரி பறிமுதல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: வீரராக்கியம் சாலையில், மணல் கடத்திச் சென்ற லாரியை, தாசில்தார் பறிமுதல் செய்தார். மணல் கடத்தல் லாரியை பிடித்து, பறிமுதல் செய்த, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம் இதுகுறித்து கூறியதாவது: கட்டளை காவிரி ஆற்றில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், புலியூர் சேகர் காலனியை சேர்ந்த அறுமுகம், கரூர் - திருச்சி சாலை வழியாக, வீரராக்கியம் சாலையில் மணல் கடத்தி வந்தார். அப்போது, வருவாய்த் துறையினருடன் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம். லாரியில் காவிரி ஆற்று மணல் மூன்று யூனிட் அளவு, அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடத்தல் லாரிக்கு அபாரதம் விதிக்க, குளித்தலை ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரை செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை