டில்லி தான் தலைநகரா? : சுப்ரீம் கோர்ட்டில் டில்லி அரசு வாதம்| Dinamalar

டில்லி தான் தலைநகரா? : சுப்ரீம் கோர்ட்டில் டில்லி அரசு வாதம்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சுப்ரீம் கோர்ட்,Supreme Court,  தலைநகர் டில்லி, capital Delhi,  மத்திய அரசு, central government,  நீதிபதி தீபக் மிஸ்ரா , judge Deepak Mishra, கெஜ்ரிவால் , Kejriwal,   டில்லி அரசு, Delhi government, வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்,advocate Indira Jaising, அரசியலமைப்பு சட்டம், constitutional law

புதுடில்லி : டில்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உண்டு என்பது தொடர்பாக மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. டில்லியில் சில இடங்களை மாற்றி அமைப்பதற்கு அதிகாரம் கேட்டு டில்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது டில்லி அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், நாட்டின் தலைநகரத்தை சட்டம் முடிவு செய்வதில்லை. நாளையே நாட்டின் தலைநகரை மத்திய அரசு வேறு ஏதாவது நகரத்திற்கு மாற்ற முடியும். டில்லி தான் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும் என எந்த அரசியலமைப்பு சட்டமும் கூறவில்லை. ஆங்கிலேயர்கள் தான் தங்களின் ஆட்சி காலத்தில் தலைநகரை கல்கட்டாவில் இருந்து டில்லிக்கு மாற்றினர் என நமக்கு தெரியும்.
டில்லிக்கு மாநில அரசின் அதிகாரத்தை வழங்க வேண்டும் என நான் கூறவில்லை. அதே சமயம் நிர்வகிக்கும் அதிகாரம் மற்ற மாநிலங்களைப் போல் டில்லிக்கும் அளிக்கப்பட்டால் மட்டுமே டில்லியின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். கெஜ்ரிவால் தலைமையிலான அரசை சுமூகமாக செயல்பட, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அப்போது மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார்.
டில்லி தான் நாட்டின் தலைநகர் என எந்த சட்டமும் சொல்லவில்லை என்ற இந்திராவின் வாதத்தை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் ஏற்றுக் கொண்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாரதி நேசன் - chennai,இந்தியா
15-நவ-201714:14:27 IST Report Abuse
பாரதி நேசன் கவர்னரை தூக்குங்க.... எல்லாம் சரியாக போகும்.... பாண்டியிலும் தான்...
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
15-நவ-201717:00:22 IST Report Abuse
Ranga Ramanathanஅந்த இடத்தில் சசிகலா, இளவரசி ஆகியோரை அமர்த்தவும்...
Rate this:
Share this comment
Cancel
sachin - madurai,இந்தியா
15-நவ-201712:13:11 IST Report Abuse
sachin ஆளும் அரசுக்கு அதிகாரத்தை கொடுத்தால் தான் மக்கள் பணிகளை தங்கு தடை இன்று பண்ண முடியும் ....அங்கே துணை நிலை ஆளுநர் தான் அதிகாரம் மிக்கவராக இருக்கிறார் அரசின் செயல்பாடுகளில் முழுவதும் தலை இட்டு ஒரு திட்டமும் செயல்படாமல் மத்திய அரசின் ஏஜென்ட் ஆகா செயல்படுகிறார் ......பிறகு எப்படி கெஜ்ரிவால் அல்லது யாராலும் ஆட்சி பண்ண முடியாது ....ஷீலா தீடிஜிட் செய்தார் என்றால் மத்திய காங்கிரஸ் ஆட்சி அதனால எந்த பிரச்னையும் இல்லாமல் ஆட்சி செய்தார் ...ஆனால் கேஜ்ரிவாலிடம் தோத்து போன ஒரு மத்திய அரசாங்கம் இருக்கிறது பிறகு எப்படி செயல்பட அனுமதிக்கும் சொல்லுங்கள் .....
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
15-நவ-201717:01:58 IST Report Abuse
Ranga Ramanathanஅப்படியா சங்கதி. உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கலாமே...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-நவ-201712:09:35 IST Report Abuse
Pasupathi Subbian அனைத்து தலைமை இடங்களும் தற்பொழுது டெல்லியை சுற்றியே அமைக்கப்பட்டுவிட்டன ,இனி இதை மாற்றுவதோ அல்லது அதிகாரத்தை குறிப்பதோ , பெரும் பெரும் பிரச்சனைகளை சாதிக்கவேண்டி வரும். தற்பொழுது நடந்துவரும் மாறுதல்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் இடைஞ்சலை உண்டாக்கும் என்பதே உண்மை.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
15-நவ-201712:04:38 IST Report Abuse
தேச நேசன் சூழல் மாசு ஆந்தி தண்ணீர் பிரச்னை பாகிஸ்தானுக்கு அருகாமை என பல இடைஞ்சல்களுள்ள டெல்லிக்கு பதிலாக நாட்டின் மைய்ப்  பகுதியிலுள்ள நாகபூருக்கு அருகில் தலைநகரை மாற்றிவிடலாம். அங்கு அரசு அலுவலகங்களைத்தவிர மற்ற தனியார் வணிக தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்து முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
15-நவ-201711:36:40 IST Report Abuse
makkal neethi நீதிபதி அவரின் கடமையை செய்வாரா இல்லை செய்யவிடாமல் தடுக்கப்படுவாரா ? தடுக்கப்படுவதற்கும் ஒரு நீதிபதி உருவாக்கப்படலாம்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-நவ-201711:29:24 IST Report Abuse
Cheran Perumal டில்லிதான் தலைநகர் என்று சட்டம் சொல்லவில்லை. ஆனால் சட்டம் சொல்லாவிட்டாலும் டில்லிதானே தலைநகர்? அதற்கான விதிமுறைகளை கடைப்பிடித்துதானே ஆகவேண்டும்? வேண்டுமானால் தலைநகரை நாட்டின் மையப்பகுதியான நாகப்பூருக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிடட்டும். கெஜ்ரிக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
15-நவ-201711:12:36 IST Report Abuse
MANI DELHI ஏதாவது ஒரு மாநிலத்தில் தானே மத்தியஅரசு இயங்க வேண்டும். அது டெல்லியாக இருக்கக்கூடாதா. கெஜ்ரிவால் அரசாங்கத்தில் ஒரு பணியாளராக இல்லை. இன்று டெல்லி அரசின் தலைவர். இவர்கள் சொல்வது போல் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநிலம் குறையாக தான் பார்க்கும். அப்படி ஒரு தனிமாநிலத்தையே மத்திய அரசின் கீழ் கொண்டுவந்தால் உடனே மற்றமாநிலங்கள் ஓரவஞ்சனை, ஒருதலைபட்சம் என்ற விமர்சனங்களை வைக்கும்போது கெஜ்ரி என்ன சொல்வார். டெல்லியில் ஐந்து ஆண்டு கால ஆட்சியை கொடுத்து இருக்கிறார்கள். ஏன் அதை விட்டுவிட்டு ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார். வேலை குறைவாக இருக்கிறது போல் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Abubacker - tirunelveli,இந்தியா
15-நவ-201711:08:24 IST Report Abuse
Abubacker நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களே இதுபோன்ற ஏராளமான சட்ட ஓட்டைகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் இந்தியாவின் முன்னேற்றதிற்க்காக சட்டங்களை சரிசெய்ய முயற்சிசெய்யுங்கள் . மத்தியஅரசு மாநில அரசு என்று பார்க்காதீர்கள் , இந்தியாவையும் இந்திய மக்களின் வாழ்வையும் முன்னேற்ற கடினமாக உழையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Tarun - Delhi,இந்தியா
15-நவ-201710:56:38 IST Report Abuse
Ganesh Tarun டெல்லி யூனியன் பிரதேசம், அது மட்டும் அல்லாமல் இந்தியாவின் ராஜ்தானியும் டெல்லி தான். இதை மாநில ராஜ்யத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற முடியாது. மாற்றினாலும் சிக்கல் தான். டெல்லியின் பழமையான பெயர் இந்திரப்பிரஸ்தம். இந்தியாவில் மற்ற நகரங்களில் பழமையான பெயர்களை மீட்டது போல டெல்லியின் பெயரையும் இந்திரப்பிரஸ்தம் என்று மீண்டும் வைக்கலாம்.
Rate this:
Share this comment
Abubacker - tirunelveli,இந்தியா
15-நவ-201712:13:06 IST Report Abuse
Abubackerடெல்லி - ஐ மாநில ராஜ்யத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற முடியாது - என்றால் ஏன் டெல்லி மாநிலத்திற்க்கு MLA தேர்தல் நடத்துகிறார்கள்?. மத்திய தேர்தல் மட்டுமே நடத்தி மத்திய அரசே ஆட்சி செய்யலாமே. தேர்தல் செலவு மிச்சம் அதையும் டெல்லி - இன் வளர்ச்சிகு பயன்படுத்தலாமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை