கட்சி தலைமை பொறுப்பை ராகுல் ஏற்பது எப்போது?| Dinamalar

கட்சி தலைமை பொறுப்பை ராகுல் ஏற்பது எப்போது?

Added : நவ 15, 2017 | கருத்துகள் (13)
Advertisement
ராகுல்,Rahul, காங்கிரஸ் தலைவர்,  Congress leader, இந்திய தேர்தல் கமிஷன், Election Commission of India, இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல், 
 Himachal Pradesh assembly election, குஜராத் தேர்தல்,Gujarat election, கருத்துக் கணிப்புக்கள், Polls,

புதுடில்லி : காங்., துணை தலைவராக இருக்கும் ராகுல், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக வெகு நாட்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் ராகுலை கட்சி தலைவராக்கும் அறிவிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
செப்டம்பர் மாதம் ராகுல் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் கட்சி தலைமை பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டது. பிறகு அக்டோபரில் நடக்கும் கட்சி தேர்தலுக்கு பிறகு அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டது. கட்சியின் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் அக்டோபர் 12 ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது.
இதனால் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 க்குள் கட்சியின் தேர்தலை நடத்தி முடித்து, ராகுலை தலைவராக அறிவிக்கும் காங்கிரசின் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ராகுல் எப்போது கட்சியின் தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திராவின் பிறந்தநாளான நவம்பர் 19 அல்லது டிசம்பர் 18 க்கு பிறகு ராகுல், கட்சியின் தலைவராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

டிச., 18க்கு பிறகு ராகுல் காங்., தலைவர்

ஒருவேளை நவம்பர் 19 அன்று ராகுலை தலைவராக அறிவித்தால், கட்சியின் தலைவர் என்ற அடையாளத்துடன் ராகுல் இமாச்சல் மற்றும் குஜராத் தேர்தல் பிரசாத்தை மேற்கொள்ள வேண்டி வரும். இதுவரை வெளியான கருத்துக் கணிப்புக்கள் இரு மாநிலங்களிலும் காங்., வெற்றி பெறுவது சந்தேகம் என கூறப்பட்டுள்ளது. இதனால் இரு மாநில தேர்தலிலும் காங்., தோற்றால் அதற்கு ராகுல் தலைவராக அறிவிக்கப்பட்டதே காரணம் என அவரை அனைவரும் விமர்சிக்க வாய்ப்புள்ளதாக காங்., கருதுகிறது.
இதனால் இரு மாநில தேர்தல்கள் முடிவடைந்த பிறகு டிசம்பர் 18 ம் தேதிக்கு பிறகு ராகுலை கட்சி தலைவராக அறிவித்துக் கொள்ளலாம் என காங்., காத்திருப்பதாக கூறப்படுகிறது. கட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட உடனேயே, கட்சியின் தோல்விக்கு ராகுல் தான் காரணம் என யாரும் கூறி விடக் கூடாது என காங்., கருதுவதால் ராகுலை தலைவராக அறிவிக்கும் முடிவை சற்று தள்ளி போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruganandam - karaikal,இந்தியா
15-நவ-201714:39:24 IST Report Abuse
Muruganandam ராகுல் காந்தியை ஏளனம் செய்வது என்றால் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல , அதற்க்கு ஜால்ரா போட ஒரு பக்த கூட்டம் , குஜராத்தில் காங்கிரஸ் வெல்லும், அன்று தெரியும் ராகுலின் சக்தி ,
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
15-நவ-201714:22:40 IST Report Abuse
siriyaar This will be after winning gujarat elections ( current status after 2022 ). He will not take any responsibility, he will take responsibility if no risk, if risk some one has to take. But he want to be leader of congress and after prime minister of india.
Rate this:
Share this comment
Cancel
Duruvan - Rishikesh,இந்தியா
15-நவ-201714:15:46 IST Report Abuse
Duruvan காங்கிரஸ் கண்ணம்மா பேட்டைக்கு வழி கேட்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X