ஏசு இடத்தில் ஜின்பிங் படம்| Dinamalar

ஏசு இடத்தில் ஜின்பிங் படம்

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சீன அதிபர் ஜிங்பிங்,Chinese President Jingbing,ஏசு கிறிஸ்து ,jesus christ, கிறிஸ்தவர்கள், christians, கோயில்கள்,temples,சீனா மார்னிங் போஸ்ட்,china morning post,  தேவாலயங்கள், churches,மசூதிகள்,mosques,   சீனா,china,

பீஜிங் : சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கிய நாடு சீனா. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி வந்த பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை போக்கி, தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள செய்வதற்காக ஏராளமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
தென்கிழக்கு சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வீடுகளில் அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏசு அவர்களை வறுமையில் இருந்து வெளிக் கொண்டுவரவோ, நோய்களில் இருந்து காப்பாற்றவோ மாட்டார் என்றும், ஆனால் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஜீசஸ் இடத்தில் ஜின்பிங்

ஏசுவின் படத்தை நீக்கி விட்டு அதிபரின் படத்தை மாட்டாவிட்டால் அரசின் சலுகைகளை பெறவோ, வறுமை நிவாரண நிதிகளை பெறவோ வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறி வருவதாக மக்கள் தெரிவிப்பதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
15-நவ-201719:05:53 IST Report Abuse
M.Guna Sekaran சூப்பர் சீனா ,ஆனால் இந்தியாவில் ஒரு 2 சாதியை வைத்தே அரசியலே நடக்குது .......... இதை விட கேவலம் வேறு ஒன்னும் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
15-நவ-201716:18:59 IST Report Abuse
GB.ரிஸ்வான் இயேசு ( ஈசா அலை ஸலாம் ) அவர்களை யார் கடவுள் என சொன்னது? அவர் ஒரு இறை தூதர் அவ்வளவே.... பைபிளில் கூட நான் கடவுள் என கூறவில்லை)
Rate this:
Share this comment
Selvamony - manama,பஹ்ரைன்
15-நவ-201718:37:32 IST Report Abuse
Selvamonyஆண்டவர் உனக்கு உண்மையான தெய்வத்தை அறிய நல்ல அறிவை தருவாராக ....
Rate this:
Share this comment
shelton - colachel,இந்தியா
16-நவ-201714:03:20 IST Report Abuse
sheltonரிஸ்வான் நீ உலகில் பிறவாமல் இருந்திருந்தால் நலமா இருந்திருக்கும் ஒரே ஒரு கடவுள் அவர் தான் ஜீசஸ்...
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
15-நவ-201716:17:04 IST Report Abuse
unmaiyai solren நம் நாட்டிலும் பி ஜெ பியில் சேர்ந்து பிரதமர் மோடிக்கு ஆதரவு கொடுத்து அவரை தலைவராக ஏற்று கொண்டு மோடி வாழ்க என கோஷம் போட்டால் கோடீஸ்வரனாகலாம் தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X