கற்றல் திறனை அறித்து பாடம் நடத்த இயக்குனர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கற்றல் திறனை அறித்து பாடம் நடத்த இயக்குனர் அறிவுரை

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி பச்சமுத்து கலை அறிவியல் மகளிர் கல்லூரியில், துவக்க கல்வியின் தரம் உயர்த்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. இதில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் பேசியதாவது: துவக்க கல்வியின் தரத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து, அதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளை வலுப்படுத்த வேண்டும். உதவி துவக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளிகளை பார்வையிட்டு, கற்றல் முறைகள் குறித்தும், மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை