'கிடப்பில் ரிங்ரோடு பணி: ஈரோட்டில் நெரிசல் பிணி' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கிடப்பில் ரிங்ரோடு பணி: ஈரோட்டில் நெரிசல் பிணி'

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: த.மா.கா., மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா முன்னிலை வகித்தனர். கட்சியின், நான்காமாண்டு துவக்க விழா மாநாடு, திருச்சியில், வரும், 25ல் நடக்கிறது. இதில் அதிக அளவில் தொண்டர்கள் பங்கேற்க செய்வது. ஈரோடு, கொடுமுடி ரோடு முதல் திண்டல் வரையுள்ள, சுற்று வட்ட சாலைப்பணி (ரிங் ரோடு), கிடப்பில் உள்ளது. இதனால் மாநகரில் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து நடக்கிறது. பணியை விரைவுபடுத்தி, வாகன பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலையின் பிற மாவட்ட இணைப்பு சாலை, சித்தோடு, கோபி, சத்தி ரோடு போன்ற இணைப்பு சாலைகள், சேதமடைந்துள்ளன. இவற்றை விரைவாக சரி செய்ய தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X