வைராபாளையம் பகுதியில் நெல் நடவு ஆயத்தப்பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைராபாளையம் பகுதியில் நெல் நடவு ஆயத்தப்பணி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: காலிங்கராயன் பாசனம், வைராபாளையத்தில், இரண்டு ஆண்டுக்குப் பின், நெல் நடவு ஆயத்தப்பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, நடப்பாண்டில் காலிங்கராயன் பாசனத்துக்கு, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில், நெல் நடவுக்கு, நாற்று விட்டு, உழவுப்பணி தொடங்கியுள்ளது.

காலிங்கராயன் தலைமடை விவசாயிகள் சங்க செயலாளர் விவேகானந்தன் கூறியதாவது: காலிங்கராயனில் கடந்த, 2015ல், தண்ணீர் திறக்கப்பட்டு, 19 நாளில் நிறுத்தப்பட்டது. மூன்று மாதம் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நடவு செய்த, நெற்பயிர்கள் தண்ணீரின்றி, வாடி கருகியது. அதன் பின் தற்போதுதான், காலிங்கராயன் பாசனப் பகுதிகளில், முழுவீச்சில் விவசாயப் பணி தொடங்கப்பட்டுள்ளது. வைராபாளையம், கருங்கல்பாளையம், சிந்தன்நகர் பகுதிகளில், 6,000 ஏக்கர் அளவுக்கு, நெல் நடவு செய்யப்படுகிறது. நாற்று நடவு செய்ய, வயல்கள் பதப்படுத்தப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் பொன்னி, பி.பி.டி., ரகத்தில் நாற்று விடப்பட்டுள்ளது. இதற்கு, 90 நாட்கள் தண்ணீர் தேவை. எனவே, 2018 பிப்., மாத இறுதிவரை தண்ணீர் விட வேண்டும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X