'அந்தரத்துக்கு' சாட்சியான அரங்கம் இடிப்பு: மாஜி கூட்டுறவு சங்கத்தலைவர் பகீர் புகார் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அந்தரத்துக்கு' சாட்சியான அரங்கம் இடிப்பு: மாஜி கூட்டுறவு சங்கத்தலைவர் பகீர் புகார்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெருந்துறை: முறைகேடான செயல் நடந்த கூட்ட அரங்கை இடித்து, அடையாளங்களை மறைக்க முயற்சி நடப்பதாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த, நல்லாம்பட்டியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. செயலாளராக பணிபுரிந்த கோபால்சாமி, இளநிலை உதவியாளர் குணசுந்தரி ஆகியோர், அலுவலகத்தில் தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட வீடியோ, கடந்த மே மாதம் வெளியானது. இதனால், மே, 15ல், இருவரையும் நிரந்தரப் பணிநீக்கம் செய்து, சங்கத்தலைவர் சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார். அதேநாளில், கோபால்சாமி ஆதரவு சங்க உறுப்பினர்கள் எட்டு பேர், நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றி, தலைவரை நீக்கினர். இதை ரத்து செய்யக்கோரி, கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளரிடம், சுப்பிரமணியம் புகார் அளித்தார். தற்போது மனு மீது விசாரணை நடக்கிறது. இந்நிலையில், கூட்டுறவு சங்க அலுவலகத்தில், கூட்ட அரங்கை இடித்துவிட்டு, மாற்றியமைக்கும் பணி, நேற்று முன்தினம் தொடங்கியது. இதை தடுத்து நிறுத்த, திங்களூர் போலீசில், சுப்பிரமணியம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கோபால்சாமி, குணசுந்தரி ஆகியோர், கூட்ட அரங்கில், தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட வீடியோ வெளியானது. இதன்மீது கூட்டுறவு பதிவாளர் விசாரணை நடத்தும் நிலையில், அரங்கை இடித்து, அடையாளங்களை மறைத்து, உரக்குடோனாக மாற்றி, குற்றவாளிகளைத் தப்பவைக்க, கட்டுமானப்பணி நடக்கிறது. சங்கத்தில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அதிகமான கட்டுமானப்பணி மேற்கொண்டால், மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளரிடம், அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதியும் இன்றி, பணி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளர் மணி கூறும்போது, ''நல்லாம்பட்டி கூட்டுறவு சங்கத்தின் கூட்ட அரங்கை, உரக்குடோனாக மாற்றியமைக்க, எவ்வித அனுமதியும் வழங்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X