கவர்னரின் ஆய்வுப் பணி: ஆதரவும், எதிர்ப்பும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னரின் ஆய்வுப் பணி: ஆதரவும், எதிர்ப்பும்

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (65)
Advertisement
 சுகாதாரத் துறை, Health Department,,கவர்னர் பன்வாரிலால் புரோஹித், Governor Banwarilal Purohit, மத்திய அரசு, Central Government,அமைச்சர் உதயகுமார்,  Minister Udaya Kumar, தினகரன்,Dinakaran, ஸ்டாலின், Stalin,கோவை, Coimbatore, தமிழிசை,  Tamilisai, பன்வாரிலால் ,Banwarilal,

சென்னை : கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். கவர்னரின் ஆய்வு பணிகள் குறித்து தலைவர்களின் கருத்துக்கள் :


ஆதரவுகள் :


கவர்னர் ஆய்வும் கட்சிகள் புலம்பலும்

தமிழிசை : கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் நோக்கம் இல்லை. கவர்னரின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாகவே உள்ளது. அதில் தவறு ஏதும் இல்லை. கவர்னரின் ஆய்வை அமைச்சர்கள் ஏற்றுள்ளனர். மாநில அரசின் தேவைகளை சிறப்பாக செய்யவே கவர்னர் ஆய்வு செய்துள்ளார். நல்லது நடந்து விடுமோ என்று மற்றவர்கள் பதறுவது ஏன் என புரியவில்லை.
அமைச்சர் உதயகுமார் : அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், ஆய்வு செய்யவும் கவர்னருக்கு உரிமை உள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : கவர்னருக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் தெரிய வந்துள்ளன. அதனால் தான் நேரில் வந்து பார்த்து, பாராட்டி உள்ளார். இதில் தவறு ஏதும் இல்லை.


எதிர்ப்புக்கள் :

ஸ்டாலின் : கவர்னரின் ஆய்வு மத்திய - மாநில அரசுகளின் ஆரோக்கியமான உறவுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது. இது போன்ற ஆய்வுகளை கவர்னர் உடனடியாக கை விட வேண்டும். நிர்வாகத்தை சீரமைக்க கவர்னர் விரும்பினால் முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழகம் என்பது புதுச்சேரி இல்லை. மாநில அரசின் நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசும், கவர்னரும் போட்டி போட்டிக் கொண்டு அரசின் அதிகாரத்தை கையில் எடுப்பது கண்டிக்கதக்கது. ஆட்டுக்கு எப்படி தாடி தேவையில்லையோ அதே போன்று தமிழகத்திற்கு கவர்னர் பதவி தேவையில்லை என்பதே திமுக.,வின் நிலைப்பாடு. கவர்னர் மூலம் மாநில நிர்வாகத்தை கையில் எடுக்க மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.


திமுக துரைமுருகன் : மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு கவர்னர் உள்ளூர் தெய்வமாக விளங்குகிறார். முதல்வரின் நாற்காலியில் கவர்னரே அமர்ந்தாலும் அமைச்சர்களுக்கு கவலையில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamizhan - Tamizhnadu,இந்தியா
16-நவ-201718:27:08 IST Report Abuse
Thamizhan இதுபோன்ற வரலாறு வெள்ளைக்காரர்கள் இந்தியாவை அடிமை நாடாக வைத்து ஆட்சி செய்யும் போது இருந்தது ,அதே முறையை ஒரு புரோஹித் செய்வதை எண்ணிப்பாருங்கள் ,இதுதான் விடுதலைபெற்ற இந்தியாவா ? மக்களாட்ச்சியை மதிக்கும் நாடா இது ? இல்லை அரசா ? ஒரு மாநிலத்தின் ஆளுநர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றதா இல்லையா என்பதை அவரது அலுவலகம் மூலமாகவே தெரிந்துகொள்ள சட்டம் வழி சொல்கிறது அதை செய்யாமல் தமிழக அரசின் அலுவலர்களை இதன் அடிப்படையில் அழைத்தார் அல்லது எதன் அடிப்படையில் இந்த கேடுகெட்ட அமைச்சர் உடன் சென்றனர்.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
15-நவ-201721:50:21 IST Report Abuse
yaaro கமலஹாசன் என்னமோ கால்வாயை பார்த்தார்ன்னு புளகாங்கிதம் அடைந்தவர்கள் ஆளுநர் இதை செய்வதுர்க்கு இப்படி கூப்பாடு போடுவது வேடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
15-நவ-201721:07:18 IST Report Abuse
Tamizhan kanchi கமல் வந்து ஆய்வு செய்யும் போது ஆதரித்த வெக்கங்கெட்ட வீணா போன கட்சிகள் கவர்னரை கண்டிக்கிறுது. விஜயகாந்த் ஒருவரே ஒழுக்கமானவர். விவரம் தெரிந்து வரவேற்கிறார்.... வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-நவ-201721:02:31 IST Report Abuse
Agni Shiva தமிழக அரசியலில் இதுவரை எந்த கவர்னரும் செய்யாதது. கவர்னர்கள் என்பவர்கள் பதவியில் இருக்கும் வரை அந்த மாநில மாளிகைகளில் உட்காந்து கொண்டு கையெழுத்து போடுவதற்கு மட்டும் உபயோகபடுத்திய காலங்கள் எல்லாம் மலையேறி போய் விட்டது. கான் கிராஸ் ஆட்சி காலத்தில் மாநிலங்களில் எதிர் கட்சி ஆட்சியாக இருந்தால் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தவர்கள். அப்போது கவர்னர்கள். வில்லன்களாக பார்க்கப்பட்டார்கள். ஆனால் பிஜேபி நியமித்து இருக்கும் கவர்னர்கள் அந்த முறையில் இருந்து வித்தியாசப்பட்டவர்கள். கவர்னர்கள் என்பவர்கள் ஊழல் செய்யும், தவறி செல்லும் மாநில அரசை சரியான திசைக்கு திருப்பி விடும் பணியை தற்போது செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
15-நவ-201720:05:55 IST Report Abuse
எல்.கே.மதி கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Tamizhnadu,இந்தியா
15-நவ-201718:08:34 IST Report Abuse
Thamizhan கவர்னருக்கு இருக்கும் ஆட்சி மக்களுடனோ அல்லது ஆட்சி பணியாளர்களுடனோ நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள சட்டத்தில் இடமில்லை ,தமிழகம் is not an Union territory , இது ஒரு மாநிலம் இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே ஆட்சிப்பணியாளர்களை நேரடி தொடர்பும் அவர்களுக்குரிய கட்டளைகளையும் கொடுக்க முடியும் . இங்கே நடப்பதைப் பார்க்கும் போது இந்தியா அழிவின் விளிம்பில் இருப்பது போன்று தெரிகிறது .சட்டம் போட்டு அதை ஆட்சியில் உள்ளவர்களும் அவர்களுக்கு வேண்டிய சாதிகளும் பின்பற்றாமல் ,ஆட்சியில் அமர முடியாதவர்களும் ,படிக்காத பாமர மக்களுக்கு மட்டும் சட்டம் செல்லும் என்றால் இந்தியா அழிவதை அந்த ஆண்டவன் நிர்ணயித்து விட்டதாகவே தோன்றுகிறது .இவருக்கு மக்களுடன் நேரடி தொடர்புக்கு தேவை என்ன? வெங்காயங்களே ஜெயலலிதா அதிமுகவில் சேந்த நேரம் தமிழகத்திற்கு அழிவு அவர் உருவில் வரும் என்று எம்ஜியார் எதிர் பார்க்காத ஒன்று .
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
15-நவ-201717:44:46 IST Report Abuse
Soundar It is a welcome move. We need to keep corrupt guys under control then only we will get good public facilities and infrastructure.
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
15-நவ-201717:34:01 IST Report Abuse
baski அடிமைகள் எதுக்கும் சரிவரமாட்டாங்கனு அவருக்கு தெரியும் போல....அதான் இந்த ஆய்வு....
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
15-நவ-201717:11:32 IST Report Abuse
baski அடிமைகள் எதுக்கும் சரிவரமாட்டாங்கனு அவருக்கு தெரியும் போல....
Rate this:
Share this comment
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
15-நவ-201716:53:35 IST Report Abuse
R.SUGUMAR இனிமேல் ஆவது தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை