சத்தி வனப்பகுதியில் 55 புலிகள்: வனத்துறையினர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்தி வனப்பகுதியில் 55 புலிகள்: வனத்துறையினர் அறிவிப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்தில் கடந்த, மூன்று மாதங்களாக, எடுக்கப்பட்ட கணெக்கெடுப்பில், 55 புலிகள் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, தலமலை, கேர்மாளம், பவானிசாகர், டி.என்பாளையம் ஆகிய, ஏழு வனசரகங்களை உள்ளடக்கிய வனப்பகுதிகளில், கடந்த, மூன்று மாதங்களாக, கேமாராவில் பதிவான காட்சிகளை வைத்து புலிகள் கணக்கிடப்படும் பணி முடிவுற்றுள்ளது.

இது குறித்து களஇயக்குனர் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கூறியதாவது; இந்தியாவில், 50க்கு மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில், வைக்கப்பட்ட கேமராக்களில் பதிவான, காட்சிகளை வைத்து, 2017 ஆகஸ்ட் முதல், அக்டோபர் வரை, புலிகளை தனித்தனியாக அடையாளபடுத்தி கணக்கிடப்பட்டதில் மொத்தம், 55 புலிகள் உள்ளன. குட்டிகள் குறித்து கணெக்கெடுப்பு பணி, நடந்து வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X