பாரம்பரிய உணவுத் திருவிழா: அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய உணவுத் திருவிழா: அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தி, அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே புதுவடவள்ளி, வேடர்நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், 200 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில், மாணவியர் பங்கேற்ற பாரம்பரிய உணவுத்திருவிழா, நேற்று நடந்தது. இதில், 19 குழுக்களாக பிரிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் தங்கள், வீட்டில் பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்ட கீரை தோசை, பணியாரம், கோதுமை மற்றும் நவதானியப்பயிறு வகைகள், சிறுதானிய உணவு வகைகள், பழக்கூழ், பழச்சாறு மற்றும் அசைவ வகை உணவு உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்திருந்தனர். இதை சுற்று வட்டார கிராம மக்கள், பார்வையிட்டனர். உணவுகளை ருசித்து சாப்பிட்டனர். பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், பி.டி.ஏ.,தலைவர் சின்னராஜ் துவக்கி வைத்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:பாரம்பரிய, உணவு வகைகளை சுவை மாறாமல், தயாரித்து உண்டால், நோய்களிலிருந்து காத்துக் கொள்வது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழலாம். இதை மக்களுக்கு எடுத்துரைக்கவே, பாரம்பரிய உணவுத்திருவிழா நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை