மாநில ஜூடோ போட்டி: தனியார் பள்ளி மாணவர்களுக்கு பதக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில ஜூடோ போட்டி: தனியார் பள்ளி மாணவர்களுக்கு பதக்கம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: மாநில ஜூடோ போட்டியில், கரூர் தனியார் பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் குவித்தனர்.

கடலூர் மாவட்டம், திண்டிவனத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், 16 மண்டலங்களில் இருந்து, 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மண்டலம் சார்பில், கரூர் மாவட்டத்தில் இருந்து, கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஜூடோ போட்டியில், 40 கிலோ எடை பிரிவில், சதீஷ்குமார் வெள்ளிப்பதக்கம், 35 கிலோ எடைப் பிரிவில் ஜோதிவேல் வெண்கலப் பதக்கம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான போட்டியில், 27 கிலோ எடைப்பிரிவில் சந்தியா தங்கப்பதக்கம், 32 கிலோ எடைப் பிரிவில் ஸ்ரீவாணி வெள்ளிப் பதக்கம் வென்றனர். 17 வயதிற்குட்பட்டோருக்கான, 55 கிலோ எடைப் பிரிவில், லோகேஷ் தங்கம் வென்றார். 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில், 55 கிலோ எடைப் பிரிவில் ராகுல், 65 கிலோ எடைப் பிரிவில் சிக்கந்தர் பாதுஷா வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் ஆகியோருக்கு, பள்ளி தாளாளர் ஆர்த்தி, முதல்வர் பிரகாசம் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X