நவ.,24க்குள் கலைத்திருவிழா: பள்ளி இயக்குநர் சுற்றறிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,24க்குள் கலைத்திருவிழா: பள்ளி இயக்குநர் சுற்றறிக்கை

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்: பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை, வரும், 24க்குள் நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில், கலையருவி திட்டத்தில், அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, வட்டார அளவில், 21 போட்டிகள், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 25 போட்டிகள், ஒன்பது முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, 86 போட்டிகள், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 91 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதில், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், நடனம், பறை, களரியாட்டம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் மற்றும் பழங்கால இசை வாத்தியங்களை வாசிக்கும் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் முதலான அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் சார்பில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்கப்பள்ளி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அதில், கூறியிருப்பதாவது: இப்போட்டிகளை பள்ளி அளவில் வரும், 24க்குள் நடத்தி முடித்திருக்க வேண்டும். ஒன்றிய மற்றும் கல்வி மாவட்டம் அளவில், வரும், 27 முதல், டிச., 4க்குள், வட்ட அளவில், ஜன., 1 முதல், 12க்குள் நடத்த வேண்டும். பின், மாநில அளவில், ஜன., 20 முதல், 30க்குள் நடத்தப்படும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் செயல்முறைப்படி, ஏற்கனவே போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால், மீண்டும் நடத்த வேண்டியதில்லை. இதுவரை போட்டி நடத்தாமல் இருந்தால், வரும், 24க்குள் கண்டிப்பாக நடத்த வேண்டும். கடந்த மாதம் சென்னை கருத்தரங்கில் பங்கேற்ற ஆசிரியர்களை பயன்படுத்தி போட்டிகள் நடத்த வேண்டும். நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டி புத்தகம் அச்சிட்டு, அனைத்து பள்ளிகளும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை