வருங்கால வாக்காளர்களை ஊக்குவிக்க வினாடி-வினா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருங்கால வாக்காளர்களை ஊக்குவிக்க வினாடி-வினா

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் கதிவரன் வெளியிட்டுள்ள அறிக்கை: வருங்கால வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 14 முதல், 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், அனைத்து பள்ளிகளிலும், வினாடி-வினா போட்டி நடத்தப்பட உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வரும், 17ல், வினாடி-வினா நடக்க உள்ளது. இதில், ஒவ்வொரு பள்ளியிலும், இரண்டு மாணவர்கள் கொண்ட, ஒரு குழு தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களிடையே வினாடி-வினா நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் ஒரு பள்ளி தேர்வு செய்யப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு, மாநில அளவில் போட்டி நடத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை