இளவயது திருமணம் நடந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளவயது திருமணம் நடந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: ''இளவயது திருமணம் நடந்தால், குழந்தைகள் நல குழுமத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பேசினார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார் வரவேற்றார். கலெக்டர் கதிரவன், எஸ்.பி., மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பேசியதாவது: பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வருகிறோம். ஆனால், தற்போது அனைத்து துறையிலும், 70 சதவீதம் பெண்கள் பணியில் உள்ளனர். பெண் குழந்தைகளுக்கு உறுதியான சட்டங்கள் உள்ளன. பெண் குழந்தைகளை தவறாக தொடுதல் மற்றும் பேசுதல் போன்றவற்றை அனுமதிக்க கூடாது. அப்படி நடந்தால், நீதித்துறையிடமோ, குழந்தைகள் பாதுகாப்பு அலகிடமோ தயங்காமல் தெரிவிக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு தவறு நடந்தால், மற்ற பெண்கள் அனைவரும் போராட வேண்டும். பள்ளிகளில் மாணவியருக்கு யோகா மற்றும் செக்ஸ் கல்வியை கற்றுத்தர வேண்டும். 14 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வி கட்டாயம். அவர்கள் விரும்பும் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கலாம். பெண்கள், 21 வயதிற்கு முன் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது. இளம் வயது திருமணம் நடந்ததால், குழந்தைகள் நல குழுமத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, நீதிபதி துவக்கி வைத்தார். இந்த பேரணி, பெங்களூரு சாலை, தர்மராஜாகோவில் சாலை வழியாக காந்திசாலை சென்று, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி அறிவொளி, சார்பு நீதிபதி தஸ்னீம், குழந்தைகள் நலக்குழும தலைவர் வின்சென்ட் செல்வராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X