தொழிலாளர் பிரச்னையை தீர்க்காவிட்டால் வேலை நிறுத்தம்: தொழிற்சங்கம் அறிவிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் பிரச்னையை தீர்க்காவிட்டால் வேலை நிறுத்தம்: தொழிற்சங்கம் அறிவிப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: ''போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்காவிட்டால், பொங்கல் பண்டிகையின் போது, வேலை நிறுத்தம் செய்யப்படும்,'' என, பாட்டாளி போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி முத்துக்குமார் பேசினார்.

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் பனிமனை முன், பாட்டாளி தொழிற்சங்கத்தின் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தொழிற்சங்கத்தின் மாநில பேரவை தலைவர் முத்துக்குமார் பேசியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், ஏராளமான பிரச்னைகள் உள்ளன. கடந்த, 2016 ல், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, தொழிற்சங்கங்களை அழைத்து பேசி இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு, அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசாமல், ஒரு சில தொழிற்சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து பேசியது. இதனால், ஓராண்டாக பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் உள்ளது. கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில், 'டிசம்பர் முதல் வாரத்தில், பேச்சுவார்த்தை துவங்கலாம்' என, அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, அந்த பேச்சுவார்த்தையில், எங்கள் பணம், 7,500 கோடி ரூபாயை, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது, பாட்டாளி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இதற்கு அரசு இடமளிக்க கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைக்கு, தமிழக அரசு விரைவில் தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை