வனத்துறையினரின் மொபைல் எண் சேவை பாதிப்பு: தொடர்புக்கு வழியின்றி மலை கிராம மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறையினரின் மொபைல் எண் சேவை பாதிப்பு: தொடர்புக்கு வழியின்றி மலை கிராம மக்கள் அவதி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஓசூர்: ஓசூர் வனக்கோட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய மக்கள், அவசரத்திற்கு, அவர்களை அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 29 சதவீதம் வனப்பகுதியாக உள்ளன. இதை, ஓசூர் வனக்கோட்டமாக உருவாக்கி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் நேராய்வு மற்றும் குறீயீடு சரகம் என, மொத்தம், எட்டு வனச்சரகங்களாக பிரித்து, வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனச்சரக பகுதிகளில் முகாமிடும், கர்நாடகா மாநில யானைகள், விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் போது, அவற்றை விரட்ட முயற்சி செய்யும் விவசாயிகள் மற்றும் வனப்பகுதிக்குள் கால்நடை மேய்க்க செல்லும் பொதுமக்கள், யானை தாக்கி பலியாவது தொடர்கிறது. இதை தடுக்கும் வகையில், விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு யானைகள் வந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகளை, கிராம மக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில், அந்தந்த வனச்சரக அலுவலர்களுக்கு, அரசு சார்பில் மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் எண் அடங்கிய பட்டியலுடன், வனப்பகுதியை ஒட்டிய மக்களுக்கு துண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில், வனத்துறையினரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜவளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் தற்போது காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், வனச்சரக அதிகாரிகளுக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட மொபைல் எண்கள், கடந்த, ஒரு மாதத்திற்கும் மேலாக செயல்படவில்லை. இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டால், சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வருகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டிய மக்கள், வனத்துறை அதிகாரிகளை, அவசர நேரத்தில் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கியிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ''என் எண்ணின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை