தளி அருகே பெண் யானை சுருண்டு விழந்து பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தளி அருகே பெண் யானை சுருண்டு விழந்து பலி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: தளி அருகே, வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் யானை, சுருண்டு விழுந்து உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த தாசரப்பள்ளி கிராமத்திற்கு, ஜவளகிரி வனச்சரக பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, மூன்று யானைகள் வந்தன. நேற்று காலை, இரு யானைகள் மட்டும் சத்தமிட்டப்படி இருந்தன. இதை கேட்ட தாசரப்பள்ளி கிராம மக்கள், அப்பகுதியில் சென்று பார்த்த போது, 30 முதல், 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை, சுருண்டு விழுந்து இறந்து கிடப்பது தெரிந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், இறந்த யானையின் வயிறு வீங்கிய நிலையில் இருந்ததால், குட்டியை பிரசவிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என, சந்தேகம் அடைந்தனர். கால்நடை மருத்துவர் பாரதிதாசன் தலைமையிலான குழுவினர், யானையை உடல்கூறு ஆய்வு செய்த போது, அதன் வயிற்றில் குட்டி எதுவும் இல்லை. மேலும் யானையின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லாததால், அஜீரண கோளாறால் இறந்திருக்கலாம் என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட யானை, அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஜவளகிரி வனச்சரக பகுதியில் இருந்து வெளியேறிய, 25 க்கும் மேற்பட்ட யானைகள், பனைகிழக்கு, நொகனூர், ஆலஹள்ளி, மணியம்பாடி வழியாக, தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் உள்ள குல்லட்டி காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன. இதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை