கொல்லிமலையில் சந்தன மரம் கடத்தல்: 3 வாலிபர்கள் கைது; 2 டூவீலர் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலையில் சந்தன மரம் கடத்தல்: 3 வாலிபர்கள் கைது; 2 டூவீலர் பறிமுதல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொல்லிமலை: கொல்லிமலையில், சந்தன மரம் வெட்டிக் கடத்திய மூவரை, போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனப்பகுதியில், சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக, நாமக்கல் எஸ்.பி., அருளரசுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, வாழவந்திநாடு எஸ்.ஐ., கங்காதரன், மணி தலைமையில், போலீசார், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, செங்கரையில் இருந்து நரியங்காடு செல்லும் வழியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு, இருசக்கர வாகனங்களில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொல்லிமலை, பெரக்கரைநாடு ஊராட்சி, வடக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜூ, 39, மதி, 28, சரவணன், 35, என்பது தெரிந்தது. சந்தன மரத்தை வெட்டி, துண்டு துண்டாக நறுக்கி, கடத்திச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரையும் கைது செய்து, 20 கிலோ சந்தனமரத் துண்டு, கடத்தலுக்கு பயன்படுத்திய, ஹீரோ ?ஹாண்டா ஸ்பிளண்டர் பிளஸ் மற்றும் பஜாஜ் டிஸ்கவர் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை